இத்தாலியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் பலி!!

0
643

இத்தாலியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் பலி!!

இத்தாலியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் பலியாகி உள்ளார்.

இலங்கையை சேர்ந்த 39 வயதான ராசரத்னம் சர்வானந்தன் என்ற சைக்கிள் ஓட்டியே உயிரிழந்துள்ளார்.

இத்தாலியின் Milan நகரில் ஏற்பட்ட கோர விபத்தில் குறித்த இளைஞன் பலியாகி உள்ளார்.

வாகனம் ஒன்று சர்வானந்தன் ஓட்டிச் சென்ற சைக்கிளை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளர்.

அவரை மோதுண்ட வாகனம் பல மீற்றர் தூரம் வீதியில் அவரை இழுத்து சென்றதாக கூறப்படுகின்றது.

விபத்திற்கு தொடர்புடைய வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: