இது நடந்தால்? எங்கள் வீட்டு மாப்பிள்ளையில் ஆர்யாவுக்கு திருமணம் நடக்காது! நிகழ்ச்சி இயக்குனர் உறுதி!

0
388

புதிதாக தமிழில் துவங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சியில் மக்களை கவரும் வகையில் நடிகர் ஆர்யா பங்கு பெறும் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொள்ளும் 16 பெண்களில் தனக்கு பிடித்த பெண் ஒருவரை ஆர்யா தெரிவு செய்து திருமணம் செய்யவுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் பெண்கள் எலிமினேட் செய்யப்பட்டு வருவதால், தற்போது மூன்றே பெண்கள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதனால் இந்த மூன்று பேரில் ஒருவரை தான் ஆர்யா திருமணம் செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் கருதும் நிலையில், நிகழ்ச்சி இயக்குனர் பிரகாஷ், இறுதியில் ஆர்யா திருமணம் செய்ய தெரிவு செய்யப்படும் அந்த பெண் எனக்கு ஆர்யாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் கல்யாணம் நடக்காது, என்று பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நிகழ்ச்சி படி இறுதியாக ஆர்யா தெரிவு செய்த ஐந்து பெண்களின் வீட்டிற்கு சென்றோம்.

அப்போது தமிழ்நாடான கும்பகோணத்திற்கு சென்ற போது மாதர் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாதர் சங்கம், அன்று பொலிசார் ஒருவர் கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்தாரே அப்போது எங்கே போனது இந்த மாதர் சங்கம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் சூட்டிங் முடிந்து இலங்கைப் பெண்ணான சூசனாவின் வீட்டிற்கு சென்றோம். தமிழகத்தில் இருந்து வருவதால், அங்கு எங்களுக்கு அனுமதி கிடைத்ததே பெரிய விடயமாகிவிட்டது.

அந்த அனுமதியின் போது கூட அவர்கள் தமிழீழம், முள்ளிவாய்க்கால், பிரபாகரன், எல்.டி.டி.ஈ போன்ற வார்த்தைகளை வாய் திறக்க கூடாது என்று சொல்லி தான் அனுமதி தந்தனர்.

அப்படி இருந்த போதும் சிங்கள் இராணுவ வீரர்கள் எங்க கூட இருந்தாங்க, அங்கு நூலகத்தில் படப்பிடிப்பு நடந்தபோது எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதுமட்டுமின்றி இலங்கையில் நாங்கள் சந்தித்த தமிழ் மக்கள் கேமராவிற்கு பின்னால் நிறைய பேசினர்.

அந்த வீடியோ இருக்கிறது, ஆனால் அதை ஒளிபரப்பு செய்தால் அவர்களுக்கு பிரச்சனையாகிவிடும் என்பதால் ஒளிபரப்பாமல் இருக்கிறோம்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஆர்யா ஒருவரை தெரிவு செய்து திருமணம் செய்யவுள்ளார். அந்த ஒருவரின் விருப்பத்திற்கு மதிப்பு அளிக்க விரும்புகிறோம், இத்தனை நாட்கள் ஆர்யாவுடன் பழகியிருக்கும் அவர் ஒருவேளை ஆர்யா எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டால் இந்த கல்யாணம் நடக்காது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: