இணையத்தில் வைரலாகும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் பிரிந்து விட்டார்களா? அவர்கள் பதில் என்ன?

0
190

இணையத்தில் வைரலாகும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் பிரிந்து விட்டார்களா? அவர்கள் பதில் என்ன?

விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் நானும் ரவுடிதான் என்ற படத்தில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவருமே அது உண்மைதான் என வெளிப்படையாக அறிவித்தனர்.

இவர்கள் இருவரும் பிறந்தநாள், பண்டிகை கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் ஒன்றாகவே இருப்பதை காட்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுவருவார்.

அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்திலும், சமீபத்தில் நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி விருது விழாவிலும் நயன்தாரா மட்டுமே கலந்து கொண்டார். இதை கவனித்த ரசிகர்கள் இருவருக்குமிடையில் மனக்கசப்பு இருப்பதாகவும், திருமணத்துக்கு விக்னேஷ் சிவன் வற்புறுத்தியதால் நயன்தாரா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல்களைப் பரப்பினர்.இந்த செய்தி தற்போது வைரலாகி வருகின்றது. இது குறித்து அவர்கள் தரப்பில் கேட்ட போது இது முற்றிலும் பொய், படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளதால் ஒன்றாக கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: