ஆஸ்துமாவையே அண்டவிடாமல் தடுக்கும் அருகம்புல் சாறு ! இன்னும் அற்புதமான நன்மைகள் ஏராளம் !

0
505

பழங்காலத்திலிருந்தே இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது.

அருகம்புல் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட புல்வகையைச் சார்ந்த சிறுசெடியாகும். உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீரைப் பெருக்கும், உடலைப் பலப்படுத்தும், குடல் புண்களை ஆற்றும்.

அருகம்புல் பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகளை தாவரம் முழுவதிலும் கொண்டுள்ளது. அருகம்புல் தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும்.

வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அருகம்புல் வளர்கின்றது. அருகு, பதம், தூர்வை, மேகாரி ஆகிய தமிழ்ப் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு.

சாதாரணமாக வயல் வெளிகளில் வளரக்கூடிய இந்த அருகம்புல்லில் ஏராளமான மருத்துவகுணங்கள் உள்ளது.
அருகம்புல்லின் வேரை காய வைத்து பொடி செய்து நல்லெண்ணெய் கலந்து தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் அண்டாது.

மாதவிலக்கு பிரச்னை உள்ளவர்கள் அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் குணமாகும். அருகம்புல் சூஸ் பெண்களுக்கு மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறை இதனை பருகிவந்தால் உடற்சூடு நீங்கும்.

அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்துமா,சளி,சைனஸ்,நீரிழிவு போன்றவை குணமாகும்.

அருகம்புல்லை அரைத்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். அருகம்புல் வேரை நீரில் சேர்த்து பொடிசெய்து கஷாயம் வைத்து குடித்தால் நெஞ்சுவலி நீங்கும்.

அருகம்புல்லை அரைத்து வாரத்திற்கு இரண்டுமுறை குடித்துவந்தால் உடலில் உள்ள பித்தம் நீங்கும். மேலும் உடலில் உள்ள வெப்பத்தை சீராக்கும்.

அருகம்புல் சாப்பிட்டுவந்தால், இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: மிதுனம் ராசிக்கு களத்திர குரு- அற்புதங்கள் நிகழும்
Next articleஆண்களே ஆண்மை அதிகரிக்க வெந்தயத்தை இப்படி செய்து சாப்பிட்டாலே போதுமாம்!