ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு 256 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் .
அபிதாபியில் நேற்று நடை பெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 41 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்களே சேர்த்திருந்தது. ஹஸ்மதுல்லா ஷாகிதி 58, மொக மது ஷாசாத் 37, இஷானுல்லா 8, ரஹ்மத் ஷா 10, அஷ்கர் ஆப்கன் 8, சமியுல்லா ஷென்வாரி 18, முகமது நபி 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் ரஷீத் கான் 32 பந்துகளில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 57 ரன்களும், குல்பாதின் நயிப் 38 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் விளாசியதால் சற்று வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் வங்கதேச அணி பேட் செய்ய தொடங்கியது.