விந்து முந்துவதை தடுத்து, மன்மதனாக மாற்றும் இந்த அற்புத காய் பற்றி தெரியுமா?

0
26930
Sign Up to Earn Real Bitcoin

நூறு அண்களில் பத்து என்ற விகிதத்தில் மிகப் பரவலாக ஆண்களைப் பாதிக்கப்படும் நோய் விந்து முந்துதல்தான். விந்து முந்துதலை ஆங்கிலத்தில் பிரி மெச்யூர் எஜாக்குலேஷன் என்பர். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.

இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர். இதனைத் தவிர்க்க பல்வேறு இயற்கை மருந்துகளை நம் முன்னோர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். அவற்றை படியுங்களேன்.

ஆண்மை பெருக்கும் ஜாதிக்காய்
விந்து முந்துதலை தவிர்க்க உதவும் முக்கியமான நாட்டு மருந்து ஜாதிக்காய், ஜாதி பத்ரி. ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விந்து முந்துதல் நிற்கும்.

இஞ்சி மற்றும் தேன்
உடலின் வெப்பத்தை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் செயலை இஞ்சி செய்கிறது. இஞ்சியை சாப்பிடுவதன் மூலம் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் விறைப்பைத் தன்மை அதிகரிக்கும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்படும்.

அதற்கு அரை தேக்கரண்டியளவு இஞ்சியையும், அதே அளவுக்கு தேனையும் எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும். நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன்னர் இதை குடித்து விட்டால், மாற்றத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்.

முந்துதலை தடுக்கும் முருங்கை
முருங்கை இயற்கை வயாக்ரா எனப்படுகிறது. முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்து உண்ணலாம் இதனால் ஆண்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும். கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

கேரட் மற்றும் முட்டை
இரண்டு கேரட்டுகளை துருவி, அதனை பாதியளவு வேக வைக்கப்பட்ட முட்டையின் மேல் தூவி பின் அதன்மேல் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றிக் கொள்ளவும். இந்த கலவையை மூன்று மாதங்களுக்கு தினமும் சாப்பிட்டு வரவும். மெதுவாக உங்களிடம் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள் மற்றும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த மாற்றம் முழுமையாக நிகழும். மேலும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன், இந்த சிகிச்சையை நிறுத்தி விடலாம்

தாது விருத்திக்கு அரைக்கீரை
அரைக்கீரை இன்றைக்கு அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கும். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். சாப்பிடலாம்.

தரமான தக்காளி சூப்
ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு தக்காளி சூப் நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்குக் காரணம் தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெண்டைக்காய்
வெண்டைக்காயை அரைத்து எடுக்கப்பட்ட பவுடருக்கு முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைத் தடுக்கும் குணம் உள்ளது. 10 கிராம் அளவுக்கு இந்த பவுடரை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டிகள் சர்க்கரையை இதில் கலந்து, ஒவ்வொரு நாள் இரவிலும் குடித்து வாருங்கள்.

இதனை ஒரு மாதத்திற்காவது பயன்படுத்தினால் உங்களுடைய உடலில் ஆச்சரியப்படக் கூடிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையையும் சமாளித்திட முடியும்.

ஆண்மை அதிகரிக்கும் ஏலக்காய்
ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு பிரச்சினை நீங்கும். ஆனால் ஏலக்காயை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மன்மதனாக மாற்றும் இஞ்சி
இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கியங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று பண்டைய நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னதான் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் படுக்கை அறையில் மனைவியை அணுகும் போது தன்னம்பிக்கையும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: