ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனையை போக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்!
குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு பெண்கள் மட்டுமே முழு காரணமல்ல, மாறாக பெண்களின் கணவர்களின் உடலில் கூட பலதரப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம் என பலதரப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில், ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் மலட்டு தன்மை ஏற்பட பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளன். அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையிலும், வாழ்க்கை பழக்க வழக்கங்களுக்கு ஏற்பவும் மலட்டு தன்மைக்கான காரணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்டோ அல்லது சில விஷயங்களில் ஒன்றாகவோ இருக்கமுடியும்.
ஹார்மோன் குறைபாடு, வயது மற்றும் உணவு மற்றும் பழக்க வழக்க முறைகள் என்பன ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருக்கும் மலட்டு தன்மையை உருவாக்கும் காரணிகளாக காணப்படுகின்றன. மேலும், ஆண்களில் வெரிகோஸ் நோய், எஜாகுலேஷனில் பிரச்சனை, ஆன்டி ஸ்பெர்ம் மருந்துகள் பிறப்புறுப்பில் இருத்தல் போன்ற காரணிகளும், பெண்களில் ப்ரோலாக்டின் ஹார்மோன் அதிகரிப்பு, பாலி சிஸ்டிக் ஓவரி சின்ரோம் போன்ற சில காரணிகளும் ஆண், பெண் இருபாலரின் உடல்களில் இந்த மலட்டு தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும் வேறுபட்ட முக்கிய காரணிகளாக காணப்படுகின்றன.
ஆண்களின் உடலில் ஏற்பட்ட மலட்டு தன்மையை விரைவில் குணமாக்கவும், ஆண்களின் உடலில் மலட்டு தன்மை ஏற்படாதவாறு பாதுகாக்க உதவும் வீட்டு வைத்திய முறைகளாக,
மாதுளம் பழம்
குழந்தை பிறப்பு மற்றும் கருவுறுதலை ஊக்குவிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாதுளையை அப்படியே பழமாகவோ அல்லது உதிர்த்து பழச்சாறு தயாரித்தோ கருத்தரிக்க விரும்பும் ஆண்களும், பெண்களும் தினசரி சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதுடன், கட்டாயம் குழந்தை பிறப்பு விரைவில் நடைபெறும்.
ராயல் ஜெல்லி
ராயல் ஜெல்லி ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கவும், அவர்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
பெருஞ்சீரகம்
ஆண்கள் தமது தினசரி உணவில் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என பெருஞ்சீரகமும் வெண்ணெயும் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவினைச் சாப்பிட்டு வரும் போது குழந்தை பிறப்புப்;பு இலகுவடைதல், ஆண்களின் ஆண்மையை அதிகரித்தல் மற்றும் பெண்களின் கருப்பை பலப்படுத்தப்படும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை கொண்டு தயாரித்த பொடி அல்லது உணவில் சேர்க்கப்பட்ட பட்டையை ஆண்கள் வாரத்தில் 3 முறை அல்லது தினந்தோறும் உட்கொண்டு வரும்போது ஆண்களின் ஆண்மைத்தன்மை அதிகரிப்பதுடன், அவர்களின் பாலியல் உணர்வுகளும் மேம்படும்.
வெண்மை நிற படிகாரம்
ஆண்களின் மலட்டு தன்மையை அடியோடு அழிக்க பெரிதும் உதவும் வெண்மை நிற படிகாரத்தை வெண்மை நிற துணியில் கட்டி, இரவு உறங்கும் பொழுது பிறப்புறுப்பு பகுதியில் அதை வைத்துக் கொண்டு உறங்கி, காலையில் அந்த துணியை எடுத்து பார்க்கும் போது அதில் ஒரு வெண்மை நிற படலம் படிந்து காணப்படும். இந்த படலம் ஏற்படாத வரை இந்த செய்முறையை மீண்டும் மீண்டும் செய்து வரும் போது மலட்டு தன்மை முற்றிலும் நீங்கும்.
ராஸ்பெரி இலை
ராஸ்பெரி இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீரை பருகி வரும் போது ஆண்களின் ஆண்மை குறைவு மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளிற்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பேரீச்சம் பழம்
ஆண்கள் தினசரி பேரீச்சம் பழத்தினை பாலில் போட்டோ அல்லது அப்படியேயோ சாப்பிட்டு வரும் போது; ஆண்மை குறைபாடு மற்றும் குழந்தை ரீதியான எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
அஸ்வகந்தா
ஆண்கள் அஸ்வகந்தாவினை உட்கொண்டு வரும் போது பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு சரியான தீர்வினை அளித்து, அவர்தம் பிரச்சனைகளை போக்க உதவுகின்றது.
ஒமேகா 3 மற்றும் DHA சத்துக்கள
ஆண்களின் தினசரி ஒமேகா 3 மற்றும் DHA சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டு வரும் போது, ஆண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் சரி செய்யப்படுவதுடன், இக்குறைபாடுகள் பிற்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.
போலிக் அமிலம்
ஆண்கள் போலிக் அமில சத்துக்கள் அடங்கிய உணவினை தங்களின் அன்றாட உணவில் சேர்த்து, உட்கொண்டு வரும் போது உடலில் கருவுறுதல் குறித்த எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதிருப்பதுடன், ஆண்மையை அதிகரித்து, இலகுவான கருத்தரிப்பிற்கும் உதவுகின்றது.
எது எவ்வாறாயினும், எந்தவொரு பொருளை பயன்படுத்தும் முன்னரும், நீங்கள் பயன்படுத்தப் போகும் பொருளால், உங்கள் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படாதா என்று ஒரு முறை மருத்துவரிடம் சோதித்து விட்டு, பினனர் அதனைப் பயன்படுத்துவது நல்லது.
By: Tamilpiththan