இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்? இதனால் யாருக்கெல்லாம் ஆபத்து வரும் தெரியுமா?

0
10162

பேப் ஸ்மியர் பரிசோதனை மற்றும் HPV பரிசோதனை ஆகிய இரண்டு பரிசோதனைகளும் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.

நம் நாட்டில் இந்த பரிசோதனைகளை பற்றிய தெளிவு இல்லாததால் மற்ற உலக நாடுகளை விட இங்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HumanPapilloma Virus) காரணம். இந்த வைரஸானது உறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்களுக்கு பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆரம்பகட்டத்திலேயே இந்த வைரஸின் தாக்கம் பெண்களுக்கு தெரியவருவதில்லை.

மாறாக, பெண்களின் உடலிலேயே தங்கியிருக்கும் இந்த வைரஸ், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி காலப்போக்கில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும்.

யாருக்கெல்லாம் வரலாம்?

நோய்த் தோற்று ஏற்பட்டாலும் பலருக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை ஏனெனில் நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நோய் தொற்றுக்கு எதிராக போராடி புற்றுநோய் வராமல் தடுக்கும்.

ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், புகை பிடிப்பவர்கள், மிகவும் இளம் வயதில் உடலுறவில் ஈடுபடுதல்,பலருடன் உடலுறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் இந்த புற்றுநோய் ஏற்படும்.

பேப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

இந்த இரண்டு பரிசோதனைகளும் முறையாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது.

இது இடுப்புப் பகுதியில் செய்யப்படுகிறது.இந்த பரிசோதனைக்கு பெண்கள் படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களின் பெண்ணுறுப்பு வழியாக கருப்பை வாய் பகுதியில் ஸ்பெக்குலம் (பொருள்களை பிரதிபலிக்கச் செய்யும் உலோகம்) மூலம் மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. அங்கிருந்து செல் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் நுண்ணோக்கி மூலம் பரிசோதனை செய்யப் படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை வைத்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்று தெரிந்துகொள்ளுங்கள்

அறிகுறிகள்

கர்ப்பப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டமானது தடைபடும் போது கால்களில் வலி, புண் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதுவே முதல்நிலை அறிகுறியாகும்.
பெண்ணுறுப்பிலிருந்து அதிகமான திரவம் துர்நாற்றத்துடன் வெளிப்படுவது.

பெண்களின் உடலில், திடீரென்று ஏற்படும் இரத்தபோக்கு கர்ப்பப்பை புற்றுநோய்கான மற்றொரு முக்கியமான அறிகுறியாகும். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும், வலியும் உண்டாகி அசௌகரியத்தினை ஏற்படுத்தும்.
பாலியல் ரீதியான உறவின் போது வலி ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

தடுக்கும் முறைகள்
10 முதல் 11 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசியினை கட்டாயம் போட வேண்டும். அப்படி போடாமல் தவறும் பட்சத்தில் 45 வயதிற்குள்ளாக போட்டு கொள்ளவேண்டும்.

கர்ப்பபையில் ஏற்படும் தொற்றுகள், வெள்ளைப் படுதல் போன்றவற்றினை அலட்சியப் படுத்தாமல் சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும்.

முன்னெச்செரிக்கை
முடிவில் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 100% தடுக்குகூடியது , கண்டறியக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது.

ஆனால் இவை காலக்கட்டத்தை பொறுத்தது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு மற்றும் தடுப்பு செயற்பாடுகள் பற்றியும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்தால் செல்கள் புற்றுநோய் செல்களாக மாறாது.இவை அனைத்தையும் தெரிந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: