ஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது எந்த ராசிக்கு? மேஷம் முதல் கன்னி வரை!

0
2960

மேஷம்
உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே,

இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். கணவன், மனைவியரிடையே அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வழியே பிரச்சனைகள் வரலாம். நண்பர்கள் இடத்தில் மனக்கிலேசம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் உடன் பண்புரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தை சந்திக்கலாம். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கும். செய்யும் வேலையில் உங்கள் தனித் தன்மை வெளிப்படும். காரியங்களை செம்மையாக முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

தொழிலதிபர்கள் சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில், வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

பெண்கள் சுபச் செலவு உங்களால் ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். பொதுநல சேவை செய்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆகையால் பாராட்டு, புகழ் கிடைக்கும். உணவு, பழக்க வழக்கங்களை ஒழுங்கு படுத்தி அதனால் வரும் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

கலைஞர்கள் கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதனால் பொருளாதாரரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பிறமொழி, இனத்தவரின் ஆதரவு, ஒத்துழைப்பு உங்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.அரசியல்வாதிகள் பொது நல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். நல்லோர் ஆதரவு கிடைக்கப் பெற்று நற் காரியங்களில் ஈடுபட்டு அதனால் சில காரியங்கள் வெற்றி அடையலாம். சக நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல் அனுசரனையாக இருப்பதும் தான் உங்களுடைய வெற்றிக்கு வடிகோலாக அமையும்.

மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். கேட்பார் பேச்சைக் கேட்டு விளையாட்டுத் தனமாக இருத்தல், எதிர்காலம் முழுவதையும் இருட்டாக அமைத்திடும். எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் பெற்றோர் அதிக அக்கறை காட்டுவார்கள். அதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு மரியாதை கொடுங்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

ரிஷபம்
எருது துரிது என்பதற்கேற்ப எதிலும் அவசரகதியில் காரியத்தை கச்சிதமாக முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே,

இந்த மாதம் இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது மிகச் சிறப்பானதாய் அமையும்.

குடும்பத்தில் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு நல்ல பணப்புழக்கம் ஏற்படலாம். உறவினர்கள் அன்னியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கண்வன், மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிட்டும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரணை உங்களுக்கு இருந்து கொண்டிருக்கும். எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். வங்கிக் கடன்கள் கிடைத்து அதன் மூலம் சில பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க முடியும்.

தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். நண்பர்கள், உங்களை நம்பிக் காத்திருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் போடும் திட்டம் உங்களுக்கு இடையூறாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

பெண்கள் பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்பத்தில் உங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். அதனால் மன வேதனை தான் ஏற்பட்டு மறையும். பிள்ளைகளால் தொந்தரவு ஏற்படும். பணிக்குச் செல்லும் பெண்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்று நிம்மதிப் பெருமூச்சடைவீர்கள்.ஆதலால் வேலைப்பளு குறையும்.கலைஞர்கள் கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பணம் கிடைக்காது. உடனிருப்போரால் பிரச்சனைகள் வரலாம். தியானம் மேற்கொண்டு மன அமைதியைப் பெறுங்கள். புதிய யுக்திகளை கையாண்டு வருவீர்கள்.

அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மூத்த அரசியலமைப்பாளர்கள் உங்களுடைய பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு முடித்து வைப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களை இன்பக் கடலில் ஆழ்த்தும். மற்றவர்கள் பொறாமைப் படும் அளவுக்கு வேலையைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள்.மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பர். ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெற்று சக மாணவர்களுடன் போட்டியிடுவீர்கள். பெற்றோர்களின் ஆசி கிட்டும். பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிக்கு சென்று வர மகிழ்ச்சியும் உண்டாகும்.

பரிகாரம்: வியாழக் கிழமை தோறும் சிவன் கோவிலை மூன்று முறை வலம் வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி

மிதுனம்
சாமர்த்திய மிதுனம் என்பதற்கேற்ப எந்த செயலிலும் தங்களது நல்ல சாதுர்ய குணத்தை வெளிப்படுத்தும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே

இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி, மற்றும் மார்புத் தொல்லை ஏற்பட்டு அகலும். திருமண பாக்கியம் கை கூடும். இறையருளும், நம்பிக்கையும் கூடும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். குழந்தை பாக்கியம் கிட்டும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும். மனைவி வழியில் லாபம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில் மனநிம்மதி உண்டாகலாம்.

தொழிலதிபர்கள் தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட அதிக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். தந்தை வழி தொழில் செய்வோருக்கு அதிக லாபம் ஏற்பட வாய்ப்புண்டு.பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். யாருடனும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

கலைஞர்கள் கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள். உடனிருப்போரால் பிரச்சனை தோன்றி மறையலாம். சீராக வாழ்க்கை ஓடுவதாக தெரிந்தாலும் அவ்வப்போது குழப்பமான நிலையும் நிலவும்.அரசியல்வாதிகள் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல் படுவது உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக அமையும். தூர தேசப் பிரயாணம் ஏற்படும் ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: புதன் தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி

கடகம்
உணர்ச்சிக்கடகம் எனபதற்கேற்ப அனைவரது உணர்ச்சிகளையும் மதிக்கும் சிந்தனையில் இருக்கும் கடக ராசி அன்பர்களே

இந்த மாதம் நன்மைகள் ஏராளமாக நடக்கக் கூடிய கால கட்டம். தேவைகள் பூர்த்தியாகி மதிப்பும் மரியாதையும், அந்தஸ்தும் உருவாகும். வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு, புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும், இப்பொழுது துவங்கலாம். தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடிக்க எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிடும்.குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்து போவதினால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்கள் அலைச்சலும், வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். உங்கள் நம்பிக்கைக்கு உகந்த ஆளாக ஒருவரை நீங்கள் தேர்வு செய்து அவருடன் மனம் விட்டு பேச முயலுவீர்கள்.

தொழிலதிபர்கள் தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். சிறு தொழில் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்கள் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைத்தாலும் உங்களுக்கு குடும்பத்தில் கிடைக்க வேண்டிய ஆறுதல்கள் கிடைக்காத போது மனம் வேதனை அடையும். குடும்பப் பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள்.

கலைஞர்கள் கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை இருக்கும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட இப்பொழுது நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் மூத்த அறிஞர்களுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத இடங்களில் வாக்கை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு வேண்டாத சிலரால் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. எல்லா இடங்களிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில நாட்களாக இருந்த மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும். ஆசிரியர்கள் இடத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள்.

பரிகாரம்: திங்கள் தோறும் விரதமிருந்து அம்பாளையும், சிவனையும் வணங்குங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

சிம்மம்
சிம்மம் பெருமை என்பதற்கேற்ப எந்த காரியத்தைக் கொடுத்தாலும் அதில் பெருமை தேடித்தரும் சிம்ம ராசி அன்பர்களே,

இந்த மாதம் பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். சந்தான பாக்கியம் கிடைப்பதற்கான உன்னதமான கால கட்டம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடை பெறும். புதிய வீடு, மனை வாங்குவதில் தடைகள் ஏற்படலாம். சற்று காலத்திற்கு ஒத்திப் போடுவது நல்லது.

குடும்பத்தில் மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம். தூரத்து உறவினர்களின் மூலம் அனுகூலமும் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.உத்தியோகஸ்தர்கள் நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. கோரிக்கைகள் நிறை வேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நீங்கள் திறமையாக செய்வீர்கள். அதிக வேலைப்பளு இருந்தாலும் திறமையாகச் செய்து நற்பெயர் எடுப்பீர்கள்.

தொழிலதிபர்கள் தொழில் உன்னத நிலையை அடையும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. வியாபாரிகலுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். முதலீடுகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். கூட்டு வியாபாரங்களிலிருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு சீராக இருக்கும். பெண்கள் வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். வீட்டில் நிலவி வந்த கருத்து வேறுபாடு மறைந்து உறவுகள் நல்ல முறையில் இருக்கும். உடல் நலம் சிறப்படையும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை. பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் வந்து நீங்கும். அலைச்சல்களை சந்தித்தாலும் வேலைகளை விரைந்து முடிப்பர்.

கலைஞர்கள் கலைத்துறையினருக்குப்பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். கேட்ட இடங்களிலிருந்து வாய்ப்புகள் வந்து மனநிறைவைக் கொடுக்கும். நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த காரியங்களை முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் அதிகமாக உழைத்து பாராட்டைப் பெறுவீர்கள். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகம் விலகும். உங்களின் மதிப்பு மிகுந்த ஒருவர் உங்களைச் சந்திக்க வருவார். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு உண்டு. வெள்நாடுகளுக்குச சென்று வர வாய்ப்புண்டு.

மாணவர்கள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெரு வெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களின் பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து வைத்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆசிரியர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி எதிர்கால வாழ்க்கைக்கு வித்திடுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள கால பைரவரை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

கன்னி
கன்னி புத்தி என்பதற்கேற்ப எல்லாத் துறைகளிலும் ஆற்றல் பெற துடிக்கும் கன்னி ராசி அன்பர்களே

இந்த மாதம் நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டாகும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல இனிப்பான செய்தி காத்திருக்கிறது. எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை அகலும்.குடும்பத்தில் வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உறவினர்களுக்கு விருந்து, விழாக்களுக்காக செலவு செய்வீர்கள். புதிய சொத்துகள் வாங்கலாம். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். மனைவி வழியே இருந்து வந்த கருத்து வேறுபாடு அடியோடு ஒழியும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சந்தான பாக்கியம் கிட்டும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னதமான நிலையை அடையலாம். பிள்ளைகளால் பெருமை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். வாகன ப்ராப்தி உண்டு. தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். சக ஊழியர்களின் ஆதடவு கிடைக்கும்.தொழிலதிபர்கள் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவதற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு இது சிறப்பான கால கட்டம். பதவி உயர்வும்,

அதனால் பொருளாதார உயர்வும் ஏற்படும். கலைஞர்கள் கலைஞர்களுக்கு தங்கு தடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். பலர் மதிக்கத்தக்க வகையில் அந்தஸ்து உயரும். வெளியூர் பயணங்களின் போது யாரிடமும் தேவையில்லாமல் அந்தரங்க விசயங்களைப் பற்றிக் கலந்துரையாட வேண்டாம். முற்போக்கான விஷயங்களில் மனம் செல்லும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைத்தே தீரும். ஆனால் யாரிடமும் பழகும் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம்.

மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப் படுவீர்கள். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த பயம் போவதற்கு தகுந்த பெரியோர்களிடம் ஆலோசனையும், பயிற்சிகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் எதிர்காலத்திற்கு சிறந்த பயனையும், ஊக்கத்தையும் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு வெள்ளைநிற பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: