அஸ்வினி முதல் சித்திரை வரை எந்த நட்சத்திரக்காரர்களுக்கு குருபகவான் செல்வங்களை அள்ளி தர போகிறார்?

0

2019-ம் ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விகாரி வருடம் அக்டோபர் 29-ம் திகதி நடக்க இருக்கின்றது.

27 நட்சத்திரகாரர்கள் அஸ்வினி முதல் சித்திரை வரையுள்ள நட்சத்திரகாரர்களுக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி எப்படி இருக்க போகுது என்று பார்ப்போம்.

அஸ்வினி

கிரக நிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினெட்டாவது நட்சத்திரத்திலிருந்து பத்தொன்பதாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: எப்போதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே! உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.

தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கலைத்துறையினர் மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள் கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்னை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

பரணி

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினேழாவது நட்சத்திரத்திலிருந்து பதினெட்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: எந்தநேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த குரு பெயர்ச்சியில் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள்.

வாழ்க்கைத் துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாகப் பணிகளை கவனிப்பது நல்லது.

குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்தத்தில் விட்டுச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு: மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் செலவை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்னை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

கார்த்திகை

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதி்னாறாவது நட்சத்திரத்திலிருந்து பதினேழாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: நல்லது கெட்டது என்று இரண்டையுமே சந்திக்கத் தயங்காத கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் விருப்பங்கள் நிறைவேறும்.

மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தைக் குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.

குடும்பத்தில் ஏதாவது பிரச்னை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.

பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் செலவுகளைக் குறைக்க திட்டமிடுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு கவுரவம் உயரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்னை தீரும்.

ரோகிணி

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினைந்தாவது நட்சத்திரத்திலிருந்து பதி்னாறாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் சுறுசுறுப்பானவர்.

இந்த குரு பெயர்ச்சியில் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடவேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு பணத்தேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும்.

மாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மை தரும்.

பரிகாரம்: காமாட்சியம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

மிருகசீரிடம்

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினான்காவது நட்சத்திரத்திலிருந்து பதினைந்தாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: வாழ்க்கையில் சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வெற்றி நடைபோடும் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் காரியத் தடை தாமதம் ஏற்படலாம் கவனமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் ஏற்படும்.

மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்ட மிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும்.

குடும்பத்தில் திடீர் பிரச்னை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும்.

பெண்கள் எந்த ஒரு சிக்கலான பிரச்னைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது.

பரிகாரம்: சிபெருமானை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.

திருவாதிரை

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதிமூன்றாவது நட்சத்திரத்திலிருந்து பதினான்காவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப சிக்கனமாக இருக்க முயலும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள்.

நற்பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம்.

கலைத்துறையினருக்கு செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.

மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு உதவும். அலைச்சல், காரியத் தடை, மனக்குழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

பரிகாரம்: நடராஜரை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

புனர்பூசம்

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பன்னிரெண்டாவது நட்சத்திரத்திலிருந்து பதிமூன்றாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: கற்பனைக் கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசாலித்தனம் நிறைந்த புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும்.

பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். கலைத்துறையினருக்கு மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சுதந்திரமான எண்ணம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்கள் எளிதாகப் புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வர மன அமைதி கிடைக்கும்.

பூசம்

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினொன்றாவது நட்சத்திரத்திலிருந்து பன்னிரெண்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: எதைச் செய்தாலும் அதில் லாபம் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடைய பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்றவர். இந்த குரு பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்னையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.

பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்கள் பிரச்னைகள் அகலும்.

மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்திரத்தை தினமும் படித்து வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

ஆயில்யம்

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பத்தாவது நட்சத்திரத்திலிருந்து பதினொன்றாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: தொலை நோக்கு பார்வையும் உயர்ந்த எண்ணங்களும் உடைய ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும்.

எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினர் அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாகப் பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்: நாகதேவதையை தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

மகம்

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஒன்பதாவது நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: சொல்லாற்றல் செயலாற்றல் இரண்டும் ஒருங்கே பெற்ற மகம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த குரு பெயர்ச்சியில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.

பெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தனப் போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு அதிக பயணங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர காரியத் தடை நீங்கும். குடும்ப பிரச்னை தீரும்.

பூரம்

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரத்திலிருந்து ஒன்பதாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர். இந்த குரு பெயர்ச்சியில் காரியதாமதம் ஏற்படக்கூடும்.

வீண் பிரச்னைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு வீண் அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாகப் பேசிப் பழகுவது நல்லது.

பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு செல்வாக்கு உயரும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி வரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேய பகவானை வெண்ணெய் சாத்தி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

உத்திரம்

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏழாவது நட்சத்திரத்திலிருந்து எட்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: முன்யோசனை இல்லாமல் எதிலும் ஈடுபட்டாலும் சிக்கலில் மாட்டாமல் நழுவிவிடும் சாமர்த்தியம் மிக்க உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் கேளிக்கையில் ஈடுபாடு உடையவர்.

இந்த குரு பெயர்ச்சியில் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.

பெண்கள் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை பூஜித்து வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

அஸ்தம்

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திரத்திலிருந்து ஏழாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கேற்ப துன்பங்கள் வந்தாலும் அதனை மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் பல வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும்.

கவனமாகப் பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாகப் பேசுவது நல்லது.

கலைத்துறையினர் உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் புதிய பதவிகளை பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: சஷ்டி தினத்தில் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

சித்திரை

கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரத்திலிருந்து ஆறாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் காரியத் தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத் தடைகள் நீங்கும்.

கலைத்துறையினருக்கு வீண் மனக்கவலை, காரிய தாமதம் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் கூடும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

சுவாதி முதல் ரேவதி வரை குருப்பகவனால் திடீர் யோகங்களை பெறபோவது எந்த நட்சத்திரகாரர்கள்?

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசிப்பலன் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை !
Next articleகுழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை; சற்றுமுன் தகவல்! குழந்தையின் அழுகை சத்தம் கேட்கவில்லை! தலையை சுற்றி மண்சரிவு – பதற்றத்தின் மத்தியில் நகரும் நிமிடங்கள் !