உடல் இளைக்க வேண்டுமா! இதோ உங்களுக்கு சில பாட்டியின் கை மருத்துவம்!

0
3821

உடல் இளைக்கவும், பருமனாகவும் இயற்கையில் சித்த மருத்துவத்தில் நல்ல வழிமுறைகள் உள்ளன.

1. பொன்னாவரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், வியர்வை அதிகரிக்கும். மல, ஜலம் எளிதாகவும் கழியும். இதனால், உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறி உடல் பருமன் குறையும்.

2. கேரட்டைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதுடன், இரண்டு டம்ளர் மோரில் இரண்டு கேரட்டைப் போட்டு நன்றாக அரைத்துக் குடித்தாலும் இரண்டே வாரத்தில் உடல் இளைக்கத் தொடங்கும்.

3. உடல் பருமனாக உள்ளவர்கள், தினமும் கொள்ளு ரசம் வைத்துக் குடித்தால், ஒரே மாதத்தில் உடல் இளைக்கும்.

4. தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கொம்புத் தேனைக் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. துளசி இலைச் சாற்றைச் சூடாக்கி அதில் கொஞ்சம் தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

6. வாழைத்தண்டுச் சாறு, பூசணிச் சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்தால் (ஏதாவது ஒன்ற) உடல் பருமன் குறைந்து, உடல் அழகு பெறும்.

7. தினமும் காலையில் துாங்கி எழுந்ததும், பல் துலக்கிவிட்டு ஒரு ஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து குடித்தால், உடல் எடை கணிசமாகக் குறையும்.

8. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், மிளகு, துவரம் பருப்பு, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் இளைக்கும்.

9. நோயினாலோ அல்லது உடல் பலவீனத்தாலோ உடல் மெலிந்திருப்பவர்கள், தினமும் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

10. பச்சை நிலக்கடலை (100 கிராம்), கொண்டைக் கடலை (100 கிராம்), நேந்திரம் வாழைப்பழம் (ஒன்று), பால் (ஒரு கப்) ஆகியவற்றைத் தினசரி சாப்பிட்டால் உடல் விரைவில் பெருக்கும்.

11. காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் சிறிது வேப்பங்கொழுந்தைத் தின்று, பிறகு பால், தயிர், நெய், நிலக்கடலையை அதிகமாகச் சாப்பிட்டால் சில நாள்களிலேயே உடலில் சதை பிடிக்கும்.

12. கொள்ளுடன் நொய் அரிசியைக் கலந்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால், உடல் பெருக்கும். உடல் வலிமையும் பெறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: