தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேரா என்பவரிடம் கையளித்துள்ளார்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
எனினும் சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மகிந்த தேசப்பிரிய நளின் அபயசேகரவை ஆணைகுழுவிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார் எனவும் பேராசியர் இரட்ண ஜீவன் கூல் குறிப்பிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக பதவி விலக தீர்மானித்துள்ளார் எனவும் கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதவி விலகல் காரணமாக தேர்தல் ஆணையகம் செயழிலந்து போகும் எனவும் இதன் காரணமாக இலங்கையின் தேர்தல் நடைமுறைகளை ஆணையாளர் நாயகமே அனைத்தையும் தீர்மானிக்கும் பழைய முறைக்கு திரும்பலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகிந்த தேசப்பிரியவின் குறித்த தீர்மானம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகின்றது.