செ.க்.ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய கடிதம்! நீங்களே படிச்சுப் பாருங்க!

0
12718

செ.க்.ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய கடிதம்! நீங்களே படிச்சுப் பாருங்க!

பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் செல்லம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியதும் பெண் குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் அப்படி ஒரு நெருக்கம் வந்துவிடும். அதற்குக் காரணம் என்னவென்று யாராவது யோசித்திருக்கீர்களா? ஆம். ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கு மேல் வந்துவிட்ட பெண் சில நாட்களில் வேறு வீட்டுக்கு வாழச் சென்றுவிடுவாள். அதனால் அவளுடைய மனநிலையில் ஒரு முதிர்ச்சி இருக்கும். தனக்கு என்ன மாதிரியான பிரச்சினை இருந்தது என்பதை பெண்ணிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும். அதோட சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்ல முடியும். அந்த வகையில் பெண்களுக்கு சமூகத்தில் இருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது பாலியல் சீண்டல் பிரச்சினைகள் தான்

ஒரு தாய் தனக்கு ஏற்பட்ட மற்றும் பொதுவாக சமூகத்தில் இருக்கிற பாலியல் சீண்டல்கள் பற்றி தன்னுடைய மகளுக்கு அறிவுரை கூறுவதைப் பார்த்திருப்போம். இந்த அம்மாவோ செ க் ஸ் பற்றி தன்னுடைய மகள் என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய பெண்ணுக்கு சீக்ரெட்டாக பல ரகசியங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தைப் பற்றி பார்க்கலாம்.

அன்புள்ள மகளே! செ க் ஸ் என்னும் போதைக்கு அடிமையாகியிருக்கிற சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொதுவாக பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் இதுபற்றிய விஷயங்களைப் பேசுவதற்கு அருவருப்படைகிறார்கள். இவ்வளவு ஏன் என்னுடைய பெற்றோர்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த செ க் ஸ் பற்றிய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தது இல்லை. நான் சிறுமியாக இருந்ததால் நமக்கெதுக்கு வம்பு என்று நானும் எதுவுமு் அவர்களிடம் கேட்டதில்லை.

எனக்கு திருமணம் ஆகி என்று நீ எனக்கு மகளாகப் பிறந்தாயோ! அன்றே நான் முடிவு செய்துவிட்டேன். எந்தவிதமான உரையாடலுக்கு விஷயத்துக்கும் நீ என்னிடம் கேட்கவோ நான் உன்னிடம் சொல்லவோ தடை விதிக்கக்கூடாது, என்று முடிவெடுத்தேன். அது செ க் ஸ் பற்றியதாக இருந்தாலும். எல்லா பெற்றோர்களாலும் இதை செய்ய முடியும். இதில் என்ன தவறு இருக்கிறது. நீ செ க் ஸ் உறவு கொள்வதற்கு முன்பாக உன்னிடம் பேச வேண்டிய தருணம் இந்த உலக பெண் குழந்தை தினத்தை விட வேறு எதுவாக இருக்க முடியும். இந்த ஏழு விஷயங்கள் என்னென்ன?

உனக்கே உன்னுடைய வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக இதுபற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன். செ க் ஸ் என்பதை சில திரைப்படங்களும் நாவல்களும் கூட வன்மமான விஷயமாகவும் போதையில் இருக்கும்போது தான் அதிகமாக காம இச்சைக்கு அடிமையாவது போன்றெல்லாம் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் செ க் ஸ் என்பது நம்முடைய உணவு போன்ற உடல் தேவைகளைக் கடந்து நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற ஒரு விஷயம். அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும். நீ செ க் ஸ் விஷயத்தில் மிகவும் சந்தோஷமாக அதை அனுபவி. ஆனால் உன்னுடைய உணர்களைப் பகிர்ந்து கொண்டு அதற்கு மதிப்பு கொடுப்பவர் யாரோ அந்த நபரைத் தேர்ந்தெடுத்துக் கொள். யார் உன் மீது அன்பும் காதலும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் உடலைப் பகிர்ந்து கொள்வது தான் செ க் ஸ் வாழ்க்கையில் உனக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பொதுவாக உன்னுடைய நண்பர்கள் எல்லோரும் சந்திக்கிற பொழுது, அவரவர்களுடைய காதல் மற்றும் ரொமான்ஸ் அனுபவங்கள் பற்றி பேசவார்கள். இன்னும் உனக்கு அப்படி செ க் ஸ் அனுபவம் ஏதும் இல்லையா என்று உசுப்பேற்றி விடுவார்கள். உன்னுடைய மனதும் குழப்பமும் சஞ்சலமும் அடையும். ஆனால் உனக்கு முன்பு இந்த உலகத்தைப் பார்த்த உன்னைவிட 25 வயது அதிகமுள்ள உன்னுடைய தோழி நான் சொல்கிறேன் கேள். எப்போது நாம் செ க் ஸ் உறவு வைத்துக் கொள்ள தயாராகிவிட்டோம் என்று நினைக்கிறாயோ அதற்குரிய சரியான ஆளைத் தேர்ந்தெடுத்து, சரியான காரணமும் இருந்தால் அதை நீ செய். இதைப் பின்பற்றிப் பார். ஒருநாள் நிச்சயம் நீ எனக்கு நன்றி சொல்வாய் என்று அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.

நாம் காதலிக்கும் நபர் மீது, உடல் ரீதியான ஆசை ஒரு சமயத்தில் நிச்சயம் எட்டிப் பார்க்கும் என்பது எனக்கும் நன்றாகப் புரிகிறது. ஆனால் காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நீ நன்கு புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். காதல் உன்னிடம் நேரத்தையும் உணர்வுகளையும் செலவிட விருப்பப்படும். பரஸ்பர புரிதலுக்கு இடம் கொடுக்கும். ஆனால் காமம் உன்னுடனான நேரத்தையும் புரிதலையும் குறைத்துவிட்டு உன் உடலைப் பற்றி மட்டுமே யோசிக்கும். இந்த வித்தியாசத்தை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிலர் தாங்கள் காதலிக்கும் நபருடன் உ ற வு வைத்துக் கொண்டு, சில நெருக்கமான விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதற்கான அந்த ஆண் பெண்ணையோ பெண் ஆணையோ கெஞ்சியாவது உ ற வி ல் ஈடுபடுவார்கள். ஆனால் உறவு வைத்துக் கொள்வதற்காக மட்டும் நீ யாரிடமும் கெஞ்சி விடாதே அது நல்ல அணுகுமுறை கிடையாது. ஏனென்றால் நாம் விரும்பும் நபரை செ க் ஸ் வைத்துக் கொள்ளும் கருவியாகப் பயன்படுத்துவது தான் அது.

உன்னுடைய பாய் பிரண்டோ அல்லது கணவரை செ க் ஸ் உறவு வைத்துக் கொள்ள உன்னை நெருங்குகிற போது, உனக்கு பிடிக்கவில்லையென்றால் ஓப்பனாக நோ சொல்லிவிடு. ஒருவரும் இந்த விஷயத்தில் உன்னைக் கட்டாயப்படுத்த முடியாது. அது மியூச்சுவல் செக்ஸாக இருக்காது. அப்படி செய்தால் அது குற்றம். நீ நோ சொல்வதிலேயே அந்த ஆளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அந்த நபருடன் உறவு கொள்வதில் விருப்பமில்லை என்பது.

பொதுவாக சிலர் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள மற்நதுவிடுவதற்கு ஒரு வடிகாலாக செக்ஸை நினைத்து, எப்போதெல்லாம் பிரச்சினை உண்டாகிறதோ அப்போதெல்லாம் செ க் ஸ் வைத்துக் கொள்வதுண்டு. சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளில் இருந்து செ க் ஸ் ஆறுதல் தரும்தான். ஆனால் அது தற்காலிகமானது. இதுபோல் ஓடி ஒழியாமல் எந்த சவாலாக இருந்தாலும் அதை தைரியமாக சந்திக்கக் கற்றுக் கொள்.

நமக்குள் நிறைய ஜெனரேஷன் கேப் இருக்கிறது. அதனால் சிந்தனைகள் வேறுவேறாக இருக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீ என்னிடம் எதையுமே விவாதிக்கவோ பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று நினைக்காதே. ஏனென்றால் நானும் உன்னுடைய வயதைக் கடந்து தான் வந்திருக்கிறேன். அந்த சமயத்தில் நானும் மற்றவர்களின் உதவியை நாடியிருக்கிறேன். என்னை அம்மாவாக மட்டும் நினைக்காதே. உன்னுடைய தோழியாக நினைத்துக் கொண்டு சொல். என்னை தாராளமாக நீ நம்பலாம். இப்படி ஒரு தாய் தன்னுடைய மகளுக்கு எப்போது எப்படி செ க் ஸ் உ ற வு இருக்க வேண்டும் இருக்கக் கூடாது என அழகாக இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொஞ்சம் சாப்பிடறவங்க குண்டாவும் நிறைய சாப்பிடறவங்க ஒல்லியா இருக்கறது ஏன் தெரியுமா?
Next articleலட்சம் பேரை கலங்க வைத்த காட்சி! தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை!