அனுஷ்கா படங்களில் நடிக்காததற்கு உண்மை காரணம் இதுதானாம்!

0
578

நடிகை அனுஷ்கா ஏராளமான ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை. தமிழ், தெலுங்கு என இருமொழிகளும் அவருக்கான செல்வாக்கு மிகவும் அதிகம். பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து அவர் நடித்துவிட்டார்.

கடைசியாக அவர் நடிப்பில் பாகுபலி, பாகமதி என இரண்டு படங்கள் வெளியானது. பாகுபலி மிகப்பெரிய வசூல் அள்ளி சாதனை செய்தது. பாகமதியும் நல்ல வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களாக அவரின் கல்யாணம் பற்றி தான் தெலுங்கு சினிமாவில் பேச்சு அடிபடுகிறது. ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தும் பலவற்றை தவிர்த்து வருகிறாராம்.

இது குறித்து அவர் சொல்லும் போது இது நானாக எடுத்த முடிவு தான். உடம்புக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்படுவதால் புதிய படங்களில் நடிப்பதை தவிர்க்கிறேன்.

இப்படியான ஓய்வை சந்தோசமாக ஏற்கிறேன் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: