அந்த மூன்று நிமிட வீடியோ: நிர்மலா தேவி விவகாரத்தில் புயலை கிளப்ப போகும் ஆதாரம்!

0
358

பேராசிரியை நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையை மூன்று நிமிட வீடியோவாக எடுத்த விசாரணை அதிகாரிகள், சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர்.

அந்த வீடியோவில், நிர்மலா தேவி சொல்லும் தகவல்கள் அனைத்தும் வெளியானால், ஆளுங்கட்சி தொடங்கி தேசிய கட்சி வரை புயல் அடிக்கும். பல கட்சிப் பிரமுகர்கள் தொடங்கி ஆளுங்கட்சியினர் வரை நடத்திய எட்டு கோடி ரூபாய் பேரம்குறித்து அந்த வீடியோவில் தகவல் இருக்கிறது என சிபிசிஐடி தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோகுறித்து விசாரணை நடத்த உயரதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். மேலும், வீடியோவில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அமைச்சர்ககள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள், உயர்கல்வித் துறையில் உள்ள சிலர் எனப் பலரது பெயர்கள் இதில் அடக்கம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளனர்.

மேலும், தனது குடும்பத்து விவரங்களை தெரிவிக்க மறுத்த நிர்மலா தேவி, இந்த வழக்கு தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள் அதற்கு பதிலளிக்கிறேன் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு… நம்பமுடியாத உண்மை!
Next articleபள்ளி மாணவனை கொலை செய்து மணலில் புதைத்த நண்பர்கள்: பதறவைக்கும் சம்பவம்!