அந்த தயாரிப்பாளரின் மகன் என்னுடன் தவறாக நடந்தார்! புகைப்படம் உள்ளது என ஸ்ரீரெட்டி புதிய சர்ச்சை!

0
442

சில நாட்கள் முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது இந்திய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் அவர் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். ஒரு பிரபல தயாரிப்பாளரின் மகன் ஸ்டுடியோவில் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாகவும், அந்த புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

அரசுக்கு சொந்தமான அந்த ஸ்டுடியோவுக்கு என்னை அடிக்கடி கூட்டி சென்று என்னை வற்புறுத்தி உல்லாசமாக இருப்பார். ஸ்டுடியோவுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அதை ரெட் லைட் ஏரியா போல மாற்றிவிட்டனர் என ஸ்ரீரெட்டி மேலும் கூறியுள்ளார்.

மேலும் வடஇந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் படுக்கைக்கு செல்ல உடனே ஒப்புக்கொள்வதால் தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வடஇந்திய ஹீரோயின்கள் உள்ளனர் என ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: