நடிகை திரிஷா கிருஷ்ணனின் சிறு வயது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை திரிஷாவின் ரசிகர்கள் அவரின் சிறுவயது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
சிறுவயதில் இருக்கும் அதே முகம் இன்று அவருக்கு உள்ளதாகவும், என்றும் அவர் இளமையான நடிகை எனவும் பலர் அதிர்ச்சியுடன் கருத்துக்களை பதிவேற்றுள்ளார்.
இவர் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இளமை பொங்கும் அழகில் திரிஷாவை பார்த்த ரசிகர்கள் யாருடா திரிஷாவுக்கு வயசாகிடுச்சின்னு சொன்னது? தலைவி எப்பவுமே தலைவிதான் என்று ஆரத்தி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.