அதிர்ச்சியில் இறந்த கணவர்! கதறி அழுத மனைவி! வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளினால் ந‌டந்த சம்பவம்!

0
330

தமிழகத்தில் அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைத்து பொருள்களை எல்லாம் எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்ததால், இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் மிகவும் பிரசித்திபெற்றது ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனசேகரன் என்பவர் சுமார் 70 ஆண்டுகளாக அவரின் தந்தை காலத்திலிருந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கான வாடகையையும் கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து வந்துள்ளார். ஆனால் பல ஆண்டுகளாக அவர் வாடகை செலுத்ததாக காரணத்தினால், கோவில் நிர்வாகம் சார்பில் வாடகை பாக்கியைச் செலுத்த வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் தனசேகரன் வாடகை செலுத்தவில்லை. இதன் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆனையர் கடந்த 2015-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாடகை பாக்கியான 2 லட்சம் ரூபாயை தனசேகரன் விரைவில் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது

வாடகை பாக்கியான 2 லட்சம் ரூபாயில், 1,37,000 ரூபாய் மட்டுமே தனசேகரன் செலுத்தியுள்ளார்.

இதனால் மீதி பணம் இருந்ததால், தனசேகரனிடம் வாடகை பாக்கித் தொகையைக் கேட்டு கோவில்ல் நிர்வாகத்தினர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதற்கு தனசேகரன் நோட்டீஸ் அனுப்பாமலும், தொகையை செலுத்தாமலும் இருந்துள்ளார். வாடகை பாக்கி 80,000 ரூபாய் செலுத்தாத காரணத்தால் தனசேகரனை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டிற்கு சீல் வைக்கும் படி மயிலாடுதுறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பொலிசார் உதவியோடு தனசேகரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு வீட்டை சீல் வைக்க வந்த தகவலைக் கூறி வீட்டில் உள்ள பொருள்களைத் தெருவில் எடுத்து வைத்தனர்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த தனசேகரன் திடீரென அதிர்ச்சியில் இறந்தார். இதைக் கண்ட மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், அதிகாரிகளின் இந்தச் செயலைக் கண்டித்து அவர்களையும் முற்றுகையிட்டனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: