தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா!

0

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா!

அன்றாடம் நாம் சமையவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

அப்படி நாம் சேர்க்கும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தரும். அதே சமயம் நம் உடல் நலத்திற்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும் ஓர் பொருளும் கூட.

முக்கியமாக இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருகினாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளைப் பெறலாம்.

கொலஸ்ட்ரால் குறையும்

தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் நிறைய பேருக்கு உள்ளது. அத்தகைய கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை வெந்தயம் போக்கும். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தில் உள்ள உட்பொருட்கள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதற்கு வெந்தயத்தில் உள்ள ஸ்டெராய்டல் சாப்போனின்கள் தான் காரணம். இவை தான் கெட்ட கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.

இரத்த சர்க்கரை அளவு

உங்கள் வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் உங்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் தினமும் வெந்தயத்தை சமையலில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

இதய நோய்கள்

மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே இதய பிரச்சனைகள் அதிகம் வருகிறது. இதனைத் தவிர்க்க வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம், சோடியத்தின் செயல்பாடுகளைக் குறைத்து, இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.

தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல்

வெந்தயம் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். எனவே உங்களுக்கு இப்பிரச்சனைகள் இருக்கும் போது, சிக்கன் சூப்பில் வெந்தயத்தை பொடி செய்து சேர்த்து குடியுங்கள், இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குடல் புற்றுநோய்

வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களான சாப்போனின்கள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றச் செய்து, குடல் புற்றுநோயில் இருந்து நம்மை விலகி இருக்கச் செய்யும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசாய் பல்லவி போல நீளமான கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன தெரியுமா!
Next articleஇரண்டே வாரத்தில் தொப்பையை குறைக்க தினமும் இப்படி செய்யுங்கள்!