அடிவயிற்று வலியா?அடிவயிற்று வலி எதன் பாதிப்பாக இருக்கும்? இந்த நோயாக இருக்கலாம்!

0
555

அடிவயிற்றில் வலி வருவதற்கு தசைப்பிடிப்பு, அதிக சூடு போன்ற பல சாதாரண காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் தொடர்ச்சியான அடிவயிற்றில் வலி இருந்து வந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது சில ஆபத்தான நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

அடிவயிற்று வலி எதன் பாதிப்பாக இருக்கும்?
கர்ப்பிணி பெண்களுக்கு சதை மற்றும் எலும்பு விரிவடைவதால் அடிவயிற்று வலி ஏற்படும். அடிவயிற்று வலியுடன் ரத்தப் போக்கு, காய்ச்சல், தலைசுற்றல் இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது.
கர்ப்பப்பையில் ஏற்படும் தொற்று அல்லது கர்ப்பப்பையை மட்டும் தாக்கும் காச நோய் போன்ற பிரச்சனையால் அடிவயிற்றில் வலி ஏற்படும்.
சிசேரியன் செய்யும் போது கர்ப்பப்பையை தைப்பதால் ஏற்படும் புண்கள் ஆற சில மாதங்கள் ஆகும். அதனால் அடிவயிற்றில் வலி உண்டாகலாம்.
கருப்பை கட்டிகள், புற்றுநோய் அல்லது நீர்க்கட்டிகள் ஏற்பட்டிருந்தால் தாங்க முடியாத அடிவயிற்று வலி உண்டாகும்.
கருப்பையில் இருக்கும் திரவம் அடர்த்தியாக மாறினாலோ அல்லது கருக்குழாயின் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அது அடிவயிற்றில் வலியை உண்டாக்கும்.
கருமுட்டை உருவாகும் போதும், மாதவிடாய் வருவதற்கு முன்பும் தொடர்ச்சியான அடிவயிற்று வலிகள் உண்டாகும்.
செரிமான மண்டலத்தில் உண்டாகும் மாற்றங்கள், உணவுக் குடலில் கிருமித் தொற்றுகள் போன்ற பாதிப்புகளினால் அடிவயிற்றில் வலி உண்டாகும்.
குடல்வால் அழற்சி நோய்கள், வயிற்றுப்போக்கு, ஃபுட் பாய்ஸன் போன்றவை காரணமாகவும் அடிவயிற்று வலி ஏற்படும்.
சிறுநீர் தொற்று, கட்டிகள், சிறுநீரக கற்கள் போன்ற பாதிப்புகள் சிறுநீரகத்தில் இருந்தால் அடிவயிற்று வலி ஏற்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: