அக்டோபர் மாதத்தில் முக்கிய கிரகங்களில் மாற்றத்தால் வாழ்வில் பெரும் பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

0

அக்டோபர் மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் 15 நாட்களும் துலாம் ராசியில் 15 நாட்களும் பயணம் செய்யப்போகிறார். சூரியனுடன் செவ்வாயும், புதனும் இணைந்தே பயணிக்கப் போகின்றனர்.

அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

அக்டோபர் 1ல் புதன் கன்னி ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 2ஆம் தேதியன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. இதன்படி இந்த மாதம் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடக்கும் இனிய மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய பெரிய முதலீடுகள் செய்து அதிக லாபம் காணும் யோகம் உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மனதில் நிறைவு உண்டாகும்.

குடும்பத்தில் புதிய வரவுக்கு காத்திருப்பவர்களுக்கு இனிய செய்திகள் கிடைக்கும். திருமண வைபவங்கள் கூடி வரும். பொருளாதார ரீதியான ஏற்றம் சீராகும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள் நன்மைகள் பெருகும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் அற்புதமாக மாதமாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சில வேலைகளை மீண்டும் செய்து வெற்றியை காண கூடிய அதிர்ஷ்டம் உண்டு.

நிலம், வீடு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பொருளாதாரத்தில் சரிவு ஏற்படாமல் இருக்க அதிகம் பொறுப்புணர்வு தேவை. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட நல்லது நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் தரும் மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட பன் மடங்கு லாபத்தை அடைவீர்கள்.

உரிய கூட்டாளிகள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் சாதக பலனை கொடுக்கும்.

புதிய முயற்சிகளில் சாதித்துக் காட்டுவீர்கள். பெண்களுக்கு மனோதிடம் கூடும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. நந்தி பகவானை திங்கட்கிழமையில் வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புத மாதமாக அமைய இருக்கிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை குறைவில்லாமல் பரஸ்பரம் அன்பு மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். பஞ்சமுக விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் குதூகலத்துடன் செயல்படக்கூடிய மாதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் நல்லுறவு ஏற்படும். பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. புதிய முயற்சிகளில் அதிக கவனம் தேவை.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் புதிய விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புதமாக அமைய இருக்கிறது.

நினைத்தபடி நினைத்த வரன் அமையும். திருமண முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தடைகளைத் தாண்டி இருக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிகாண கூடிய மாதமாக அமைய இருக்கிறது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் பணியில் கவனம் செலுத்தினால் நன்மை தரும். குடும்பத்துடன் அதிகம் நேரத்தை செலவிட்டால் மன நிறைவு உண்டாகும். சனிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் மாதமாக அமைய இருக்கிறது. பணம் எவ்வளவு வேகத்தில் வருகிறதோ அந்த வேகத்தில் செலவுகளும் வரும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய யுக்திகள் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக மனதில் நினைத்த விஷயங்கள் நிறைவேறும் யோகமுண்டு. எதிலும் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக அமைய இருப்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. வெளியிட பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள் நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கூடுதல் பயிற்சியும், முயற்சியும் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் பிடிவாதமாக இருந்து அவற்றை அடைவதை குறிக்கோளாக வைத்திருங்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும்.

குடும்பத்தில் திடீர் உறவினர்கள் வருகை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் திருமண வைபவங்கள் கைக்கூடி வரும் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். வளர்ச்சியை எட்டக்கூடிய வகையில் அமைந்து இருப்பதால் புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும்.

புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலம் சில நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள்.

பெண்களுக்கு வெளியிடத்தில் அதிக கவனம் தேவை. குழந்தைகள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து மனதிற்குப் பிடித்த விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்வது நல்லது. நல்லது நடக்க சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் அகலக்கால் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது எச்சரிக்கை தேவை.

கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து படிப்படியான அன்பு அதிகரித்து வரும். அமைதியான சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். நேர்மையுடன் நடந்து கொண்டால் அதற்கான பலன்களையும் அனுபவிக்கும் காலமாக அமையும். ஈசன் வழிபாடு அத்தனை துன்பங்களையும் போக்கும் அற்புத பரிகாரமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் குடும்பத்திற்கு என கொஞ்ச நேரத்தை ஒதுக்குவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் குழப்பங்கள் தொடர்ந்து நீடிக்கும். எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அதனை மனோதிடத்துடன் சமாளிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். உங்களை பெற்றவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

தந்தைவழி உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் வந்து மறையும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சுக்கிர ஓரையில் சுக்கிர வழிபாடு செய்வது சுகபோக பலன் தரும்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை விட சிறந்த பலன்களை கொடுக்கும் அற்புத மாதமாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான சூழ்நிலை உண்டாகும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான நல்லுறவு நீடிக்கும்.

புதிய முயற்சிகளில் நண்பர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுப செய்திகளை பெறுவீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் காணப்படும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள்.

வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் பராமரிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம் சார்ந்த சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது. முருக வழிபாடு செவ்வாய்க்கிழமைகளில் செய்து வர நன்மைகள் நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த மாதம் நவராத்திரி எப்போது ஆரம்பமாகிறது! முழுவிபரம் இதோ! இந்த நவராத்திரியில் செய்யவேண்டியவை என்ன!
Next articleஇன்றைய ராசி பலன் 04.10.2021 Today Rasi Palan 04-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!