உடலில் இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் இவ்வளளவு நோய்கள் தாக்குமா?

0

இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்யாவசிய பொருளான ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும். அதே போல் இரத்தமானது அனைத்து செல்களில் இருந்து கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.

இரத்தம் சுத்தமாக நுரையீரல் பெரும்பங்கு வகிக்கிறது. நுரையீரல் இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் மூலம் கடத்துகிறது. அதே நேரத்தில் உடலின் அனைத்து பாகங்களில் இருந்து அசுத்த இரத்தத்தை இதயத்தின் வலது பாகத்திற்கு கொண்டு சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் பொழுது ஆக்சிஜென் உள்ளிளுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜென் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு இரத்தம் ஆக்சிஜென் கலந்த இரத்தமாகிறது. இவ்வாறு இரத்தம் சுத்தமடைகிறது.

தற்போது பெரும்பாலான நோய்களுக்கு இரத்த சுத்தமின்மைதான் காரணமாக உள்ளது. இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துப் பொருட்களான வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கடத்தப்படும். கல்லீரல் உடலின் கெட்ட பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்றும் உறுப்பாகும்.

இரத்தம் உடலின் கெட்ட பொருட்களை கல்லீரலுக்கு கடத்துகிறது. கல்லீரல் அதை வெளியேற்றுகிறது;. மனிதனுக்கு வயது அதிகமாகும் பொழுது காலப்போக்கில் இரத்தம் தனது தூய்மையை இழக்கிறது. அதன் பின்பு உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து அனைத்து நோய்களின் இருப்பிடமாக மனித உடல் மாறுகிறது. அதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்..

ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண் பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் உண்டாகும்.

இரத்தம் சுத்தமாக தண்டுக் கீரை, மிளகு , மஞ்சள், தேங்காய்பால் மருந்து. தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு , சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.

நெல்லிக்காயை பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். அது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும். இந்த மருத்துவத்தை வேப்பிலை தளிரும் காலத்தில் ஒரு மாதம் முழுவதும் வருடத்திற்கு ஒரு முறை என பழக்க படுத்திக் கொண்டால் ஆயுளுக்கும் ரத்தம் சுத்தமாக இருக்கும்.

இரத்தம் சுத்தமாக இது கொஞ்சம் விலை உயர்ந்த மருந்து. காசினிக் கீரையை பாதாம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். புத்துணர்ச்சி கிட்டும்.

முருங்கைக் கீரையை சுத்தம் செய்த பின் துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி பசும் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.

அருகம்புல் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய ஓர் அதிசயம். நம் முன்னோர்கள் அதன் மகத்துவம் அறிந்தே அதனை விநாயகருக்கு மாலையாய் அணிவித்தனர். வெறும் அருகம்புல் சாறு அருந்தினாலே உடலில் பல அவஸ்தைகள் காணாமல் போகும். அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு இரத்தமும் தூய்மையாகும்.

இரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கி இரத்தம் சுத்தமாக அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீரிழிவை கட்டுப்படுத்தி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்!
Next articleகுறைந்த செலவில் வெயிட் குறைக்கும் மந்திர மருந்து இதுதான்!