ஹீரோவானார் பரோட்டா சூரி ! தன் படத்தில் சூரியை ஹீரோவாக்கியது ஏன்? இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்..!

0

நகைச்சுவை நடிகர் சந்தானம் பல படங்களில் ஹீரோவாகிவிட்டார். ஆனால் இதுவரை நகைச்சுவை நடிகராக மட்டுமே இருந்த பரோட்டா சூரி, திடீரென ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூரி.

வடசென்னை படத்துக்கு பின்னர் தனுஷ், மஞ்சுவாரியர் காம்பினேஷனில் அசுரன் படத்தை இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன். இந்த படம் பூமணி என்னும் எழுத்தாளரின் வெக்கை நாவலை மூலகதையாக வைத்து எடுக்கப்பட்டது.

இந்த படம் வெள்ளியன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.

இதுகுறித்து அவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், ‘’வடசென்னை பாகம் 2 ஆரம்பித்தால் முடிக்க இன்னும் இரண்டுவருசம் ஆகும். நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்னும் கவிதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை படமாக்க போகிறேன், அது இறந்துபோன தாத்தாவின் இறுதிச்சடங்கு பத்துன கவிதை.

நடிகர் சூரியிடம் மிக இயல்பாக இருக்கும் எளிமையும், அப்பாவித்தனமும் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும்.”என கூறியுள்ளார் அவர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகல்வி, செல்வம், வீரம் மூன்றும் அருளும் அற்புத ஸ்லோகம !
Next articleஅடேங்கப்பா இப்படியெல்லாமா கடத்துவாங்க? பிடிபட்ட பாதிமொட்டை இளைஞரால் பரபரப்பு..!