வேறு மாதிரி போட சொன்னேன்…. அதனால் தான் வெற்றி சாத்தியமானது: டோனி

0

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று போராடி வென்றது.

இதன் மூலம் நான்காவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை. 2 வது பந்தில் 2 ரன்களும் 3வது பந்தில் ஒரு ரன்னும் அடிக்கப்பட்டன. 4 மற்றும் 5 வது பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறக்க விட்டார் ரஷித் கான்.

இதனால் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஐதராபாத் அணிக்கு இருந்தது. அந்த பந்தை சிறப்பாக வீசிய பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வென்றது.

போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் டோனி, அனுபவ வீரராக இருந்தாலும் பிராவோவுக்கும் சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. கடைசி ஓவரை பிராவோ வீசினார்.

அப்போது இரண்டு பந்துகள் இருக்கும்போது பிராவோவின் திட்டத்தை மாற்றச் சொன்னேன். வேறு மாதிரி போட சொன்னேன். அதனால்தான் வெற்றி பெற முடிந்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது முக்கியம். இந்த பிட்ச் முந்தைய ஐபிஎல்லை விட நன்றாக இருந்தது,

இந்தப் போட்டியில் ராயுடு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரை எந்த வரிசையில் இறக்குவது என்று நினைத்தேன். அவருக்கு நல்ல இடத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவரை எப்போதும் மதிக்கிறேன். எந்த வரிசையில் இறங்கினாலும் நம்பிக்கையாக ஆடுகிறார். இருந்தாலும் அவரை தொடக்க வீரராக பார்க்க விரும்புகிறேன். ஓபனிங்கில் அவர் அபாயகரமான பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆசிரியரே வன்புணர்வு செய்த கொடுமை: நான்காம் வகுப்பு மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!
Next article41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா?- வைரலாகும் புகைப்படம்!