கொரோணா தலைவிரித்தாடும் காரணத்தால் பலரும் வீட்டில் முடங்கிக்கிடக்கின்றனர் இதன் காரணமாக பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். டிக் டாக் செய்வது, டான்ஸ் வீடியோ, சமையல் என பலவற்றை பகிரும் வீடியோக்களை வெளியிட்டு செம வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயீஷா வீட்டிலிருந்தபடியே அருமையாக நடனமாடி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இணையத்தில் குவியும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நடனத்தை வைரலாக்கி லைக்குகளையும் கமண்டுகளையும் குவித்து வருகின்றனர்.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: