தலைமன்னார், பியர் கேம்பலஹவுஸ் பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது இது வரையில் தெரியவரவில்லை.
இந்த நிலையில் விபத்து தொடர்பில் தகவலறிந்த மன்னார் பிரதேசசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையானவற்றை உடன் செய்து கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை மன்னார் பிரதேச உறுப்பினர்களான எம்.நயீம், புனிதா மற்றும் டிப்னா ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: