வட மாகாணத்தில் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் 100 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறைவுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அந்த நிலைமையை மாற்றியமைக்க முடிந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள பணத்தில் அந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு முதலீடு செய்ய வேண்டும். பிரதான முதலீட்டில் தாம் முதலீடு செய்த பணத்தை போன்று 3 மடங்கு வருமானம் வரி செலுத்தாமல் பெற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் பெருந்தொகை பணத்தை தாயகத்திலுள்ள தமது உறவுகளுக்கு நாள்தோறும் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.