3 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

0

3 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்டம் மிக்கவர்களே, திருவள்ளுவர் கூட திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்து பால் என மூன்று வகையாக பிரித்துள்ளதுடன், நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ள முத்தமிழ் முழக்கம் அதாவது இயல், இசை மற்றும் நாடகமும் முன்றே.

இந்தவகையில், மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்களாக உள்ளதுடன், முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்களாக C, G, L மற்றும் S ஆகியனவும் உள்ளன. பொதுவாக 3,12,21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் 3 ஆம் எண்ணுக்குரியவர்களாக கொள்ளப்படுவர்.

குண இயல்புகள் எவ்வாறு இருக்கும்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதனால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பதுடன், இவர்களிடம் நல்ல பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் யாவும் அமையப் பெற்று தாம் கற்றுக் கொண்டதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக திகழ்வர். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் பண்பு இவர்களிடத்தில் காணப்படுகின்ற போதிலும் அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கக் கூடிய தைரியம் உடையவர்களாகவே காணப்படுவர்.

எனினும், தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இவர்களிடம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், எப்போதும் மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் கொண்டிருப்பதுடன், சுயநலம் பாராமல் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ள முடியும்.

மேலும், இவர்கள் எளிதில் முகஸ்துதிக்கு அடிமையாகி விடுவர். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிக்கும் பண்பு உடைய இவர்களிடம் பெரிய கருத்தரங்குகளிலும் பல மணி நேரம் பேசக்கூடிய திறமை இருக்கும். அதில் முக்கியமாக இவர்கள் எவ்வளவு வேகமாகப் பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். இவர்கள் தாம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி nதிகம் பேசுவதுடன், பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.

இவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல மிகவும் கடுமையானதாக இருப்பதுடன், இவர்கள் முன் கோபக்காரர்களாக காணப்படுகின்ற போதிலம், கோபம் தணிந்த பின்னர் உண்மையை உணர்ந்து கொள்ளும் பக்குவம் உடையவார்கள். மேலும், இவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசும் குணம் உடையவர்கள் என்பதனால், இவர்களிடம் பிறருக்கு தொரியாத ரகசியங்கள் எதுவுமே இருப்பது அபூர்வம்.

இவர்களிடம் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு காணப்பட்ட போதிலும்; அடிமைத் தொழில் செய்வது இவர்களுக்கு அறவே பிடிக்காத ஒன்றாகும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் இவர்களுக்கு கிடைப்பதுடன், ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிகளவில் ஈடுபடுவார்கள்.

உடல் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் எப்படி

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாக நடுத்தரமான உயரம், நீண்ட கழுத்து, திரண்ட புஜங்கள், கூரிய மூக்கு மற்றும் நல்ல நிறம் ஆகியனவற்றைக் கொண்டிருப்பதுடன், பொதுவாக இவர்களின் குரலில் அதிகார தன்மையும், கட்டளையிடுவது போன்ற கண்டிப்பும் வெளிப்படும். இவர்களுக்கு தலையில் சீக்கிரமே வழுக்கை விழுவதுடன், சாதாரணமாக சரும நோய்கள், நரம்புத் தளர்ச்சி மற்றும் மூட்டு வாதம் போன்றனவும் அடிக்கடி ஏற்படும்;.

இவர்கள் உரிய நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள தவறின் குடலில் புண்கள் ஏற்படுவதுடன், இருதய பலவீனமும் ஏற்படும்;. மேலும், இவர்கள் அதிகளவில் யோசனையில் ஈடுபடுவதனால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இவர்கள் குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது

குடும்ப வாழ்க்கை எப்படி அமையும்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட போலும் அதனை துச்சமாக எண்ணி சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் இவர்களிற்கு காதல் திருமணம் கைகூடுவது கடினம். அதாவது ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடுவது உண்டு. மாறாக அதிகளவானோருக்கு பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே இடம்பெறுவது வழக்கம்.

மேலும், இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை மிகுந்த தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பதுடன், ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறுமளவிற்கு இவர்களின் குடும்ப வாழ்க்கை அமையும். இருப்பினம், இவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே கிடைப்பதுடன், சில சமயங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உருவாகும்.

பொருளதாரம் நிலைமை

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களிற்கு அடிக்கடி எதிர்பாரத வகையில் திடீர் பண வரவுகள் கிடைப்பதுடன், இவர்களிற்கு சுகவாழ்வு மற்றும் சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. அதாவது இவர்களின் வாழ்க்கையில் பணமுடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக காணப்படுவதனால், பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கும். இவ்வாறாக மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாக பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள்.

தொழில் அமைப்பு எப்படி

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக உள்ளதனால் இவர்களுக்கு பலருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு போன்றனன மிகவும் பொருத்தமான தொழிலகளாக உள்ளதுடன், நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத்துடன் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றகரமானவையாக அமைவதுடன், இவர்கள் பொதுவாக நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். இதனை விட மூன்றாம் எண் குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதனால் இவர்கள் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் மிக்கவர்களா இருப்பர்.

நண்பர்கள் மற்றும் பகைவர்களின் நிலை

கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வதுடன், நன்றிக்கு உதாரணமாக கூறக் குடிணவர்களாகவும் காணப்படுவார்கள். எனினும், ஒருவரை தனக்கு பிடிக்கவில்லை எனில் அவரை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1, 2 மற்றும் 9 ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் நட்பு வளர்ப்பதுடன், 5 மற்றும் 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் இவர்களால் அவ்வளவாக ஒத்துப் போக முடிவதில்லை.

குருவுக்குரிய காலம் எது

நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலம் மற்றும் பிப்ரவரி 19 ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திகதி வரையிலான காலமும் குருவுக்குரிய காலமாக காணப்படுகின்றன. மேலம், பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்களாக உள்ளதுடன், வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகவும் கொள்ளப்படுகின்றது.

குருவுக்குரிய திசை எது

குருவுக்குரிய திசையாக வடகிழக்கு மூலை எனக் குறிப்பிடப்படும் ஈசானிய மூலை கொள்ளப்படுவதனால், மூன்றாம் எண்ணுக்குரியவர்கள் எந்தவொரு செயலையும் ஆரம்பிக்கும் போதும் ஈசானிய மூலையில் தொடங்கினால் அவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஸ்ட கல் எது

குருவுக்குரிய ரத்தினமாக புஷ்பராகம் உள்ளதனால், புஷ்பராக கல் பதிந்த மோதிரம் மற்றும் சங்கிலி ஆகியனவற்றை அணிந்து கொள்வதன் மூலம்; சகல விதமான மேன்மைகளையும், வெற்றிகளையும் அடைய முடியும்.

பரிகாரங்கள் என்ன‌

குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது வரும்போது தோஸங்கள் நீங்குவதுடன், இங்கு, குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதுடன், ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யவது நல்லது.

அதிர்ஷ்டம் தருபவைகள்

அதிர்ஷ்ட திகதி – 3,12,21,30

அதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட கிழமை – வியாழன்

அதிர்ஷ்ட கல் – புஷ்பராகம்

அதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 24-09-2017
Next article‘மெர்சல்’ படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன தெரியுமா?