மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாத நாட்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி இன்றைய தினமும், எதிர்வரும் 14ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாளையும், நாளை மறு தினமும் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி A முதல் L மற்றும் P முதல் W வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒருமணிநேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: