பொள்ளாச்சியில் காதலனலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி, அடுத்தடுத்து தனது நண்பர்கள் 8 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது விசாரணையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி மகளிர் போலீசில் இளம்பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணோடு நெருங்கிப் பழகிய குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் சிறுமியை காதலிப்பதாகக் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த அமானுல்லா, கடந்த 4ஆம் தேதி அவரை காரில் அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்துள்ளான்.
அந்த பெண்ணை மீண்டும் வீட்டில் கொண்டு சென்று விடாமல் பக்கத்து ஊரில் விட்டுவிட்டு சென்றுள்ளான். இதனை அடுத்து நண்பன் ஒருவனை செல்போனில் அழைத்த அந்த பெண், தன்னை அழைத்துச் சென்று வீட்டில் விடுமாறு கேட்டுள்ளார்.
அந்த பெண்ணின் நிலைமையை தெரிந்துகொண்ட அவரது நண்பன், மேலும் ஒரு நண்பனுடன் காரில் வந்துள்ளான். பின்னர் சிறுமியை ஆழியாறு பகுதிக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளனர். அத்தோடு நிர்க்கமால் மேலும் சில நண்பர்களை போனில் அழைக்கவே, அவர்களும் சிறுமியை கற்பழித்துள்ளனர்.
ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி உறவினர்களிடம் நடந்ததை சொல்லி கூறியுள்ளார். இதனையடுத்து போலீசில் புகாரளிக்கப்பட்டு அந்த பெண்ணின் காதலன் உட்பட 9 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.