பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்! விசிக ஆர்ப்பாட்டம்!

0

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கக்கோரி சென்னையில் எதிர்வரும் 15 ஆம் தேதி விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற விஷமிகள் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களை நட்பாக பழகி தனியே வரவைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து அச்சுறுத்தி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேற்காண் நால்வரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு ஆதரவாக ஆளும் தரப்பின் முக்கிய புள்ளிகள் சிலரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நெஞ்சை உறைய செய்யும் மேற்காண் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் ; குற்றவாளிகள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்ட வேண்டும். சமூக அரங்கில் பெண்களுக்கான பாதுகாப்பினை நாம் உறுதி செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக மாநிலம் முழுவதும் கிளர்ந்துவருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் 15 ஆம் தேதி அன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கக்கோரி சென்னையில் எதிர்வரும் 15 ஆம் தேதி விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அக்கட்சி தலைவர் திருமா அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் வெறுமனே கடந்துபோக கூடியதல்ல ; ஆளும் தரப்பு தமது நடவடிக்கைகள் மூலம் யாரையோ காப்பாற்ற முயலுகிறதென பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சியில் பயங்கரம்! தண்ணீரில் மிதந்த பெண் மற்றும் குழந்தைகளின் சடலங்கள்!
Next articleபொள்ளாச்சியில் நடந்து பாலியல் துஷ்பிரயோக சம்பவம்! கொதித்து போன பிரபலத்தின் மனைவி!