பேசுன ஒத்த பைசாவ கொடுக்கல விஜய் டிவி-யை கிழித்து தொங்கவிட்ட மீரா!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்ட பணம் தனக்கு கொடுக்கப்படவில்லை என மீரா மிதுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராய் கலந்துக்கொண்டவர் மீரா மிதுன். ஜூலை 27 ஆம் தேதி பிக்பாஸ் வீட்டைவிட்டு மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் திரைப்படங்கள் மீது கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் செய்தியார்கள் சந்திப்பில் விஜய் டிவி மீது புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். மீரா கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டப்படி எந்த ஒரு தொகையும் கொடுக்கவில்லை, இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

இது சம்மந்தமாக தொலைக்காட்சிக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. இதற்கு பின்னரும் தொலைக்காட்சி ஒப்பந்தப்படி எதுவும் கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொகைக்காட்சியும் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅட்லீயிடம் சிக்கிய பாட்ஷா 2: தலைவர் சேப்டர் இதோடு க்ளோஸ்!
Next articleராகவா லாரன்ஸ் நடிப்பில் “ரங்கஸ்தலம்” தமிழ் ரீமேக்!