புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்த மாதிரியான பலன்களை தரப்போகிறார்!
2021 டிசம்பர் 10 ஆம் திகதி அதிகாலை 5.53 மணிக்கு விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்லப் போகிறார். இந்த தனுசு ராசியில் புதன் டிசம்பர் 29 ஆம் தேதி அதிகாலை 11.15 வரை இருந்து பின் மகர ராசிக்கு செல்லப் போகிறார்.
மேஷம் ராசிக்கு
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் நல்ல மரியாதையையும், வெகுமதியையும் பெறுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறுவீர்கள். இது எந்தவொரு கஷ்டத்தையும் கடந்து செல்ல போதுமான வலிமையையும் விடாமுயற்சியையும் உங்களுக்கு வழங்கும்.
மேலும் இக்காலத்தில் அதிக ரிஸ்க் எடுப்பீர்கள். வியாபாரிகள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சாதகமான பலன்களைப் பெற கடினமாக உழைப்பீர்கள்.
இளைய உடன்பிறப்புகள் முழு ஆதரவை வழங்குவார்கள். உயர்கல்விக்கு நல்ல காலம். இக்காலத்தில் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.
ரிஷபம் ராசிக்கு
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். ஆகவே பணியிடத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எதையும் அமைதியாகவும், இணக்கமாகவும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
உங்கள் தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிக்கலைத் தவிர்க்க, நீங்கள் உங்கள் வேலையில் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கல்வியில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் பாடத்தைப் புரிந்து கொள்வதில் சிரமப்படுவார்கள்.
மிதுனம் ராசிக்கு
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். இக்காலகட்டத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
உங்கள் துணையுடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் காலநிலை மாற்றம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
நீங்கள் உங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், மாற்றுவதற்கு இது சிறந்த நேரம் அல்ல என்பதால் இன்னும் சிறிது காலம் காத்திருங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம்.
கடகம் ராசிக்கு
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் அதிக அழுத்தத்தை அனுபவிப்பீர்கள். இக்காலத்தில் எதிலும் தாமதங்களை சந்திக்க நேரிடலாம்.
ஆனால் உறுதியாகவும், விடாமுயற்சியுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இதுவும் கடந்து போகும் என்பதை மனதில் கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
சந்தோஷமான விஷயம் என்றால், இக்காலத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணிப் பொறுப்புகள் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் போட்டியாளர் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியில் வெற்றி பெறமாட்டார்கள். இக்காலத்தில் நீங்கள் சக்தி வாய்ந்த நபராக திகழ்வீர்கள்.
வணிக முன்னேற்றத்திற்கு சாதகமான காலம். உங்களுக்கு பல மூலங்களிலிருந்து நல்ல நிதி ஆதாயங்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகள் மற்றும் இன்டர்வியூவிற்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
புதிய விஷயங்களை செய்ய சிறந்த நேரம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இருப்பினும், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
கன்னி ராசிக்கு
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் நிதி ஆசைகள் நிறைவேறும். காதல் உறவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இக்காலத்தில் நன்கு ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.
மாணவர்கள் நல்ல செயல்திறன் மற்றும் கடின உழைப்பால் நல்ல பலனைப் பெறுவார்கள். இக்காலகட்டத்தில் சொத்து அல்லது வாகனம் வாங்குவதில் பெரிய முதலீடுகளைச் செய்ய வாய்ப்புள்ளது.
துலாம் ராசிக்கு
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் புத்திசாலித்தனமும் திறமையும் பணியிடத்தில் பாராட்டப்பட்டு வெகுமதியும் கிடைக்கும்.
இந்த காலத்தில் பயணம் செய்ய வேண்டியிருக்கும் மற்றும் அந்த பயணம் நல்ல பலனைத் தரும். உங்கள் விடாமுயற்சி உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண உதவும். நிதியைப் பொறுத்தவரை, சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
எனவே எந்தவொரு நிதி தொடர்பான எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம் ராசிக்கு
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிதி நிலைமை வலுவாக இருக்கும். இதனால் குடும்பத்தில் உங்கள் நிலைமைகள் மேம்படும். உங்கள் பொறுப்புக்களை எளிதில் நிறைவேற்றுவீர்கள்.
என்ன தான் நிதி நிலை வலுவாக இருந்தாலும், ஆடம்பரமான பொருட்களுக்கு செலவழிக்க வாய்ப்புள்ளதால் உங்கள் முதலீடுகளை கவனமாக திட்டமிடுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடாதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அமைதியின்மையுடன் இருக்கும் மற்றும் மன உளைச்சலை உணர்வீர்கள்.
எனவே உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கி மனதை அமைதிப்படுத்த முயலுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசிக்கு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படுவீர்கள். எனவே உங்களால் முடிந்த வரை நன்கு செயல்படுங்கள்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீண்ட காலமாக குடும்பத்துடன் மேற்கொள்ள நினைத்த பயணத்தை இப்போது திட்டமிடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் தொடர்பு கொள்ளும் திறன் மேம்படும்.
மகரம் ராசிக்கு
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் வலுவாக இருப்பீர்கள். நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். இது உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நல குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் ராசிக்கு
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் செல்வத்தைப் பெருக்க அதிக உழைப்பையும், முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இக்காலத்தில் பணத்தை சேர்ப்பதில் கவனத்தை செலுத்துவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கடந்த கால பிரச்சனைகள் தீர்க்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அதீத ஆசையைக் கொண்டிருப்பார்கள்.
மீனம் ராசிக்கு
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால்புதிய வேலை அல்லது புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், வெற்றியைப் பெற அதிர்ஷ்டத்தை மட்டும் முழுமையாக நம்பாமல், கடின உழைப்பையும் முயற்சியையும் எடுக்க வேண்டும்.
நீங்கள் எந்தப் பணியைச் செய்யப் போகிறீர்களோ, அதை நீங்கள் நம்புவதும், முழு நம்பிக்கையுடன் இருப்பதும் மிகவும் முக்கியம். இக்காலத்தில் சிறந்த பண வரவை எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட முடியாததால் தம்பதிகளிடையே பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் அதிக ஆற்றலுடன் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இந்த காலகட்டம் மாணவர்களின் கல்வி எதிர்பார்ப்புகளை நனவாக்க உதவும், மேலும் அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.