பிறந்திருக்கும் 2019: ஜனவரி மாத எண் ஜோதிட பலன்கள் எந்த திகதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலி?

0

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நிதானமான அணகுமுறையால் அனைவரையும் வசீகரிக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் செயல் திறமையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது திறமைகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உங்கள் திறமை அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிறச்சனைகள் உங்களுக்கு சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும்.

மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மனதில் பட்டதை உடனடியாக செயலாற்றக்கூடிய இரண்டாம் எண் அன்பர்களே. செயல்திறமை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள் வேலையை அசார்தியாமாக செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சிறிது கவனமாக கையாளுதல் வேண்டும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிசுமை குறைந்து காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிங்கள் கூறும் சொல்லிற்கு நன்மதிப்பை இருக்கும். ஆன்மீக ஈர்ப்பு இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று நந்தீஸ்வரரை வணங்குவதன் மூலம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எந்த ஒரு காரியத்திலும் நிதான போக்கைக் கடைபிடித்து வெற்றி பெறும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கடினமாக இருக்கும் என்று நினைக்கும் காரியம் சுலபமாக முடிந்துவிடும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த இழுபறி அகலும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படலாம். வாகனங்களை கையாளும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் உங்கள் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும். அரசியல்துறையினருக்கு பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான நிலை நிலவும். ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் தீர்வு ஏற்படும். மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். அரசியல்துறையினருக்கு புதிய நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

பரிகாரம்: திங்களன்று அம்மனை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்துறையினருக்கு காரிய தடங்கல்கள் நீங்கும். கலைத்துறையினருக்கு அதிக நேரம் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணூவை புதன்கிழமி அன்று வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
குடும்பங்களை மதிக்கும் உண்ணதமான எண்ணம் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் புத்தி கூர்மை அதிகரிக்கும். எதைச் செய்தாலும் நிறுத்தி நிதானத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு வாங்குவார்கள். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் உங்களிடம் அண்பு காட்டுவார்கள்.

பெண்களுக்கு அவசர முடிவுகள் எடுக்குபோது ஒரு தடவைக்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்ல்து. அரசியல்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உண்மை வழியிலேயே நடக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் தீர்கமான முடிவெடுத்து அதில் வெற்றி காண்பிர்கள். தைரியமான மனநிலை இருக்கும். எந்த ஒருச் செயலையும் சாமர்த்தியமாக தன் வசப்படுத்திக்கொள்வீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். முக்கிய முடிவு எடுக்கும் போது கவனத்துடன் செயல்படுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் திறமையைக்காட்டும் வாய்ப்பாக அமையும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும் தங்களின் நெலிவு சுழல் அரிந்து செயல்பட்டால்தான் அக்காரியம் சித்தியில் முடியும்.. கலைத்துறையினருக்கு தொழிலில் முழுகவனம் செலுத்தவேண்டும். அரசியல்துறையினருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கபெற்று மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பாடங்களை படிப்பதில் மிகுந்த் ஆர்வமாக இருக்கும். உயர்கல்வி கற்ப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
தங்களின் உந்நதமான குணத்தால் உயர்ந்து வரும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் தங்களின் தொழில் திறமையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்கு அனுகூலம் நிறைந்திருக்கும். மற்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். எதிர்ப்புகள் குறையும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு இருக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வரும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அர்சியல்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் நிறைந்திருக்கும். கல்வியில் தேர்ச்சி பெறவதற்கு கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மிகுந்த அறிவும் திறமையும் கொண்டு காணப்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு காரியங்கள் அனைத்தும் அனுகுலமாகவே இருக்கும். முன்கோபம் இருக்கும் அதனை கொஞ்சம் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள். பணவரவு சூழ்நிலை சுமாராக இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு கருத்து வேற்றுபாடுகள் நிறைந்திருக்கும் சிறிது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வேலை பழுகூடும். அரசியல்துறையினருக்கு தங்களின் எண்ணம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் நிறைந்திருக்கும்

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎன்னை புற்றுநோயில் இருந்து காப்பாற்றியது நான் அருந்திய தேநீர் தான்! பெண்ணின் தகவல்!
Next articleதிடீரென காருடன் கருகி உயிரிழந்த நபர்… வெளியேற முடியாதது ஏன் என தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்!