பிரித்தானியாவில் சடலங்களுடன் சிக்கிய லொரி: கைதான சாரதியின் புகைப்படம் வெளியானது !

0

பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரில் 39 சடலங்களுடன் இன்று பகல் சிக்கிய லொரி சாரதியின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தில் உள்ள Portadown பகுதியில் குடியிருக்கும் 25 வயதான Mo Robinson என்பவரே கைதான அந்த சாரதி.

எசெக்ஸ் பகுதியில் சிக்கிய அதே லொரியுடன் புகைப்படம் ஒன்றை அவர் தமது பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

நடந்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என சாரதி Mo Robinson-ன் உறவினர்கள் விசாரணை அதிகாரிகளிடம் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வடக்கு அயர்லாந்து பொலிசார் எசெக்ஸ் நகர பொலிசாருடன் இந்த விவகாரம் தொடர்பில் இணைத்து செயல்பட உறுதி அளித்துள்ளனர்.

குறித்த லொரியானது பெல்ஜியம் நாட்டின் ஜீப்ரக் பகுதியில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி பல்கேரியா நாட்டிலும் இந்த லொரியானது சென்று திரும்பியுள்ளது. ஆனால் குறித்த தகவலை பல்கேரியா பிரதமர் தற்போது மறுத்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி பகல் 1.40 மணியளவில் பொலிசாருக்கு இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் மேற்கொண்ட சோதனையில் லொரி ஒன்றில் 39 சடலங்களை மீட்டுள்ளனர்.

பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரும் கொலைக் குற்ற விசாரணையாக இது அமையும் என எசெக்ஸ் பொலிசார் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரித்தானியாவில் லொரியுடன் சிக்கிய 39 சடலங்கள் தொடர்பில் வெளியான பகீர் பின்னணி !
Next articleசாண்டியின் முன்னாள் மனைவியின் குழந்தைக்கு என்ன நடந்தது? காஜலின் விவாகரத்துக்கான காரணம் அம்பலம் !