பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் தர்ஷன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இதுவரை எந்த போட்டியாளர்களுக்கும் கண்கலங்காமல் இருந்த ரசிகர்கள். தர்ஷனின் வெளியேற்றத்தின் போது அழுதுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி அண்மையில் விஜய் ரிவியில் நடந்துள்ளது. தீபாவளி தினத்தன்று ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் கொண்டாடியுள்ளனர். தற்போது முதன் முறையாக நிகழ்ச்சியில் பேசிய தர்ஷன்,
”பிக்பாஸ் வெளியேற்றத்தின் போது மிகவும் மனமுடைந்து போனேன். ஆனால் வெளியே வந்த பின் மக்கள் காட்டிய அன்பு எனக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது. என்னதான் கைத்தட்டுவது, பாராட்டுவது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எனக்காக கண்ணீர் விட்டது மிகப்பெரிய விஷயம்” என பேசியுள்ளார்.