சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடலுக்கான சில காட்சிகளை புனேவில் படமாக்கினார்கள்.
இதில் அஜித்துடன் குரூப் டான்ஸர்களுடம் நடனம் ஆடினார் அப்போது சரவணன் என்ற குரூப் டான்ஸர், நடனம் ஆடிக்கொண்டு இருந்தபோது வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்கு சரவணனை படக்குழுவினர் கொண்டு சென்றார்கள். ஆனால் மருத்துவ மனையில் சரவணனின் உயிர் பிரிந்துவிட்டது.
முன்னதாக, அவருக்கு டெஸ்ட் எடுக்கும் போதே, அஜித்துக்கு இந்தத் தகவல் தெரியவர உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார் அஜித்.
சரவணன் காலமானது தெரிந்தவுடன், உடனடியாக அவரோடு இருந்த டான்ஸர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்.
அவரது உடலின் பிரேத பரிசோதனை முடியும் வரை மருத்துவமனையிலே இருந்த அஜித், மேலும், அவரது குடும்பத்தினரிடமும் பேசி உடலை புனேவிலிருந்து மும்பைக்கு அனுப்பி, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் வரை முழுக்க தொலைபேசி வாயிலாக எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு பேசிக் கொண்டே அனைத்தையும் கவனித்து செய்துகொடுத்திருக்கிறார்.
இதனை கண்ட குரூப் டான்ஸர்களும் அவரின் குடும்பத்தாரும் மிகவும் நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்தனர்.