நாளைய தினம் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

0

நாளைய தினம் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

2022 ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் தான் அதாவது 5.20 மணிக்கு பிறக்கிறது. வாக்கிய ரீதியாக அகஸ் கணக்கை வைத்துதான் இது கணக்கிடப்படுகிறது.

இந்த கணக்கீட்டின் படி ஒரு நாளைக்கு 60 நாழிகை இரவு பகலாக 30 நாழிகையாக பிரிக்கப்படுகிறது. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒரு நாழிகையாகவும் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை ஒரு நாழிகையாகவும் உள்ளது.

சூரிய பகவான் தை 1-ந்தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போதுதான் மகா சங்கராந்தி புரு‌ஷர் பிறக்கிறார். உத்தராயண புண்ணிய காலமும் உதயமாகிறது.

இந்த ஆண்டு தை 1-ந் தேதி வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மீன லக்னத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் புதுப்பானையில் அல்லது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க சிறந்த நேரமாக இது கணக்கிடப்பட்டுள்ளது.

காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் உத்தராயண புண்ணிய கால தர்ப்பணம் செய்யும் நேரமாகும். வழக்கமாக தட்சிணாயன காலத்தை விட உத்ராயண காலத்தில் நோய்கள் பரவும் காலமாக கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு உத்தராயண புண்ணிய காலம் தை 1-ந்தேதி அன்று மாலையில் அதாவது பின்னோக்கி பிறப்பதால் நல்ல பலன்கள் குறைவாகவே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 13.01.2022 Today Rasi Palan 13-01-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 14.01.2022 Today Rasi Palan 14-01-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!