நடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி! சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி!

0

`தன் குழந்தைக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமைதான். ஆனால், அதற்காகத் தன்னுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வது தீர்வாகாது.

வாழ்க்கையில் மதிப்புமிக்க அனுபவங்கள் பல உண்டு. அதில் ஒன்று நல்ல தகப்பனாக இருப்பது. பெரிய பொறுப்புகளையும் தியாகங்களையும் சுமக்கும் தந்தையர் படும் வலிகள் வெளியே தெரிவதில்லை. குடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னத தந்தையர்கள் நிறைய பேர் உண்டு.

அன்புள்ளம் கொண்ட அந்தத் தந்தையரை உயர்த்திச் சொல்லும்விதமாக மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், `தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே…’ என்றொரு பாடலை எழுதியிருந்தார். `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்துக்காக அவர் எழுதிய அந்தப் பாடல் வரிகளை மாலைப்பொழுதில் ரம்மியமான சூழலில் கேட்டால் நிச்சயம் கண்களில் நீர் ததும்பும்.

தந்தையர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில், “தங்களுடைய குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து, ஆளாக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்கான பொருளாதார பலத்தை அடைவதற்காகவும் தங்களது ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்துவதில்லை” என்பது தெரியவந்துள்ளது.

நெருக்கடியான வாழ்க்கை முறையால் அவர்களால் தங்களது உடல்நலனில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதன் விளைவாக அவர்களுக்கு உடல் சோர்வு, கவலை ஏற்பட்டு வேலைசார்ந்த அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்’ என்கிறது அந்த ஆய்வு.

`தன் குழந்தைக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமைதான். ஆனால், அதற்காகத் தன்னுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வது தீர்வாகாது. ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதைத் தந்தையர் உணர வேண்டும். வேலைசார்ந்த அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொள்ள பழக வேண்டும். விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வெளியே செல்வது அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்’ என்றும் வலியுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகனடா வாழ் ஈழச் சிறுமி அப்பாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்! குவியும் லைக்ஸ்!
Next articleஎன் குழந்தைகளின் கண்முன்னே அந்த கொடூரம் நடந்தது! கண்ணீருடன் விவரிக்கும் தாய்!