திரையில் உருக உருக காதலிக்கும் நடிகர் நடிகைகள், நிஜ வாழ்க்கையிலும் காதல் செய்து தம்பதிகளாக இணைவது ஒன்றும் புதிதான விடயமல்ல.
காதலித்து திருமணம் செய்வது எவ்வளவு கடினமோ. அதே போல தான் திருமணத்திற்கு பிறகு வாழ்ந்து காட்டுவதும் கடினமான ஒன்று.
என்னதான் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் வந்தாலும் , அவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலில் தீர்மானமாக இருந்தாலும், அங்கு பிரிவு என்ற ஒன்றிற்கே இடமிருக்காது.
அப்படி, காதலித்த கரம் பிடித்து தற்போது வெற்றிகரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் அழகிய ஜோடிதான் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்த ஜோடி பிரசன்னா-சினேகா.
அந்த படமே அவர்களது காதலுக்கு வித்திட்டது. இவர்கள் இருவரும் அண்மையில் எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.