நடிகர் விஷால் -அனிஷா திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடித்தபிறகு, அதில் வைத்தே தனது திருமணம் நடைபெறும் என முன்பே அறிவித்திருந்தார் நடிகர் விஷால். தற்போது கட்டிட பணிகள் இறுதிகட்டத்தில் இருக்கிறது.
இந்நிலையில், தெலுங்கு நடிகை அனிஷாவைக் காதலிப்பதாக சமீபத்தில் விஷால் அறிவித்தார். தொழிலதிபரின் மகளான அனிஷா, அர்ஜூன்ரெட்டி படத்தில் நடித்தவர்.

விஷால் நிச்சயதார்த்தம்
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். வரும் ஆகஸ்ட் மாதம் விஷால் -அனிஷா திருமணமும் நடைபெறும் எனத் தெரிகிறது.

இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் பலரை இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்களில் மனோபாலா, குட்டி பத்மினி, லலிதாகுமாரி, சவுந்தர்ராஜன், ஸ்ரீமன் உள்ளிட்டோர் உள்ளனர். மணமகன் விஷால் கருநீல நிற உடையிலும், மணமகள் அனிஷா சந்தன நிற உடையிலும் உள்ளனர்.

இந்த புகைப்படங்களில் அதிக ஆடம்பரமாக நகைகள் அணியாமல் எளிமையாக, அதே சமயத்தில் அழகாக காட்சியளிக்கிறார் அனிஷா. நிச்சயதார்த்தத்தின் ஒரு பகுதியாக இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.




