நடிகரையே திடீர் திருமணம் செய்து கொண்ட பகல் நிலவு சமீரா!
சின்னத்திரை தொடர்களில் காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் அன்வர்– சமீரா. இவர்களை நினைவிருக்கிறதா?? இவர்கள் பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலர்களாக லைப்பிலும் உண்மையான காதலர்கள் தான். மேலும்,விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் அன்வர்– சமீரா காதலர்களாக அறிமுகம் ஆனார்கள் பின் அதுவே உண்மையாகவும் மாறிவிட்டது என்று சொன்ன உடனே அனைவருக்கும் ஞாபகம் வந்திருக்கும்.இந்நிலையில் அன்வர்– சமீரா அவர்கள் நவம்பர் 11ஆம் தேதி மாலை பௌர்ணமி நிலவில் இருவரும் மணம் முடித்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள். மேலும்,ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது.
ரியல் காதலர்களாக இருந்த அன்வர்– சமீரா பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்ததால் அந்த சீரியல் செம ஹிட். ஆனால், யூனிட்டில் இருந்தவர்கள் எல்லோரும் அன்வர்– சமீராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் தான் சீரியல் இருந்து விலகினார்கள் என பல வதந்திகளைக் கிளப்பினார்கள். ஆனால், அது உண்மை இல்லை. அதற்கு பிறகு சமீரா அவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்து அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். ‘பொன்மகள் வந்தாள்’ தொடர் மூலம் அன்வர் தயாரிப்பு பக்கம் வந்தார். இந்நிலையில் றெக்க கட்டி பறக்குது சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமாக முடிந்தது. அப்போது அவர்களுடைய திருமண பேச்சு குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. பின் அவர்கள் திருமணம் குறித்து விருது விழா மேடையிலும் கூறினார்கள்.
தற்போது வாழ்க்கையில் நிஜ ஜோடிகளாக இணைந்து விட்டார்கள். இதுகுறித்து புது தம்பதிகள் அன்வர்-சமீரா பல விஷயங்களை பகிர்ந்தார்கள். அதில் முதலில் அன்வர் பேசியது, காதலர்களாகவே இருக்கிற வாழ்க்கை மிகவும் அருமையானதாகவும், அற்புதமானதாகவும் இருக்கும். ஆனால், எல்லோருமே ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து தானே தீர வேண்டும். நாங்கள் இருவரும் ஐந்து வருடமாக காதலித்து வந்தோம். இப்போது கணவன் மனைவியாக எங்களுடைய காலம் தொடங்கி விட்டது. அதோடு நவம்பர் 15 ஆம் தேதி சமீராவின் பிறந்த நாள். நாங்கள் காதலர்களாக இருந்த போது அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சமீராவை ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு கூட்டிட்டுப் போவேன். அது தான் நான் அவர்களுக்கு தருகிற பிறந்தநாள் பரிசு. இந்த பிறந்த நாளுக்கு எங்களுடைய திருமணம் தான் பரிசு என்று மகிழ்வுடன் கூறினார்.
மேலும், இவர்கள் எந்த ஒரு சினிமா, டிவி பிரபலங்கள் என யாருக்கும் அழைப்பிதழ் அழைக்காமல் எளிமையான முறையில் தங்களுடைய கல்யாணத்தை செய்து முடித்தார்கள். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது திருமணத்தில் பணத்தை அவசியமில்லாமல் செலவு செய்வது எங்களுக்கு பிடிக்கவில்லை. அப்படி ஆகும் செலவுகளை யாரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து நாங்கள் அந்த செலவை செய்ய முடிவு எடுத்தோம். பின்னர் எங்களுடைய உறவுக்காரர்கள் கல்யாணத்தையும் இதே மாதிரி தான் செய்யப் போகிறோம் என்ற அவருடைய வார்த்தை கேட்பதற்கு ரொம்ப மனநிறைவாக இருந்தது. கல்யாண மண்டபம் கூட அவர்கள் வைக்கவில்லை சிம்பிளாக சமீரா வீட்டிலேயே கல்யாணத்தை முடித்து விட்டார்கள். இது தான் எங்களுக்கு மன நிறைவாக இருக்கிறது என்று கூறினார்கள். மேலும், இவர்கள் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்