தீபாவளிக்குப் பின் எந்த ராசிக்காரர்களுடைய‌ வாழ்க்கையில் பொன்மழை பொழியும் தெரியுமா!

0

தீபாவளிக்குப் பின் எந்த ராசிக்காரர்களுடைய‌ வாழ்க்கையில் பொன்மழை பொழியும் தெரியுமா!

தீபாவளி முடிந்தவுடன் வக்ர நிலையில் இருந்து குரு பகவான் தனது இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறார். குரு பகவானின் சஞ்சாரம்,வக்ர நிவர்த்தி, இடப்பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு போன்ற‌ ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது. யாருக்கு 2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகிறது என்று இங்கே பார்க்கலாம்.

தீபாவளிக்குப் எந்த ராசிக்

துலம் ராசிக்காரர்களே உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் நீங்கி மன அமைதி கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி குடும்பமாக‌ ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு நல்ல திருமண‌ வரன் அமையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு அதிகரிக்க ஆரம்பிக்கும். உங்கள் தாயாரின் உடல் நிலை சீராகும். சிலர் புதிதாக வீடு வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்கள், நணபர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொத்துத் தகராறுகள் தீரும். அடகிலிருந்த பழைய நகையை மீட்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். நவம்பர் முதல் உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பித்து விட்டது.

விருச்சிக‌ ராசிக்காரர்களே உங்களுக்கு வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் கைகூடும். சுபகாரியங்களால் வீடு களைகட்டும். குடும்பத்தில் சில பிரச்சினைகளால் பேசாமல் இருந்த கணவன்-மனைவிக்குள் இனி அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் விலகும். அவருடனான மோதல்களும் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். நீண்டகாலமாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி வலிய வந்து பேசுவார். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வேலை விசயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

தனுசு ராசிக்காரர்களே: மாத இறுதி வரை வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிய வேண்டி வரும். உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு ராஜயோகம் தேடி வரப்போகிறது. பணத்தட்டுபாடு ஓரளவு குறையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். எந்த சிக்கலாக இருந்தாலும் பெரியவர்களை வைத்துப் பேசி சுமுகமாக முடிக்கப்பாருங்கள்.
பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்படவேண்டாம். உயர் கல்வி- உத்தியோக விசயமாக பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். முன்கோபம், வாக்குவாதம் வந்து நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதியுண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் வந்துபோகும். உறவினர்கள், நண்பர்களின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள். நெடுந்தூர, இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2023 புத்தாண்டில் எந்த எந்த‌ ராசிக்காரர்லளுக்கெல்லாம் அதிச்டம் தேடி ஓடி வரும்… வாங்க பக்கலாம்
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகத்தால் கிடைக்கப்போகும் பலன்கள்!