ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் சிரித்த முகம் அல்லது சிடுமூஞ்சியாக இருப்பது ஏன் ! இதற்கும் என்ன காரணம் !
பொதுவாக சனி/செவ்வாய்/ராகு/கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று லக்னத்தில் இருந்தால் அவரது முகத்தில் சிடுசிடுப்பு காணப்படும். குறிப்பாக செவ்வாய் லக்னத்தில் இருந்தால் மூக்கிற்கு மேல் கோபப்படுபவராக இருப்பார்.
லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அவரது கோபம் சுட்டெரிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நியாயமான விடயத்திற்கு மட்டுமே கோபம் வரும். லக்னத்தில் சனி இருந்தால் அவருக்கு அசட்டுத்தனமான கோபம் இருக்கும். ஆனால் அவரது மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை முக பாவனையில் இருந்து அறிய முடியாது.
லக்னத்தில் சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். சிலருக்கு லக்னத்தில் சனி இருந்தாலும், நல்ல நிலையில் உள்ள குரு (வக்ரம், நீச்சமடையாத, பாவிகள் சேர்க்கை பெறாத) அந்த சனியைப் பார்த்தால் அவர்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எதிரில் இருப்பவர் பைத்தியம் என்று நினைக்கும் அளவுக்கு சிரிப்பார்கள்.
மேலும் 5, 9வது இடத்திற்கு உரிய கிரகங்கள் லக்னத்தில் இருந்தாலும் அந்த ஜாதகர் சிரித்த முகத்துடன் இருப்பார். ஏனென்றால் 5ஆம் இடம் ஒருவரின் மனப்பான்மையை குறிக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 5க்கு உரியவர் லக்னத்தில் இருந்தால் அவர் பலவற்றையும் அலசி ஆராய்ந்து தெளிவான முடிவெடுப்பவராகவும், கோபத்தை எளிதில் வெளிப்படுத்தாதவராகவும், எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்.
சிரித்த முகம், சிடுமூஞ்சி ஆகியவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், உடலமைப்பு, குணம் ஆகியவற்றைப் பற்றியும் சங்க கால ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.