பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வைரலான பூவையார் இன்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
ஒன்றரை நாட்களில் 713,9808 மக்கள் வாக்குகளை பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பூவையார் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இன்றைய தினம் வாக்குகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பூவையாருக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
இதன்போது, அவரின் தாய் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். எனது மகன் என்படி இங்கு வந்தார் என்பது கூட தெரிய வில்லை. இந்த வெற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார்த்தை கூட வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாதிக்க துடிக்கும் அவருக்கு வறுமை ஒரு இடையூறு கிடையாது என்பதை இன்று அனைவருக்கும் நிருபித்துள்ளார்.
அரங்கமே ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இதேவேளை, பூவையாருடன் போட்டிப் போட்ட சிங்கப்பூர் சிறுவன் சூர்யா 481,9742 ஓட்டுகளை பெற்றுள்ளார்.