Home Patti Vaithiyam சூடு நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடித்தால் பல நோய்கள் குணமாகும் தெரியுமா?

சூடு நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடித்தால் பல நோய்கள் குணமாகும் தெரியுமா?

0
2899

நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவர்களா அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிட்டது என்று அர்த்தம். இப்படியான‌ சூழ்நிலையில் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வழிகள் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்க்கும் ஆம், அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

சூடு நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடித்தால் பல நோய்கள் குணமாகும் தெரியுமா?

பானம் தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்குதல் வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் பானத்தைப் பருகுவதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளாக,

மன அழுத்தம் நீங்க‌

துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிரந்தரமான நிவாரணம் கிடைக்கும்.

சளி குணமாவதற்கு

அடிக்கடி சளித் தொல்லைக்கு ஆளாகுபவர்கள் இந்த நீரை குடித்து வரம் போது இதிலுள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளித் தொற்று ஏற்படுவதனைத் தடுக்கும்

தலைவலி குணமாவதற்கு

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபட முடியும்.

ஆஸ்துமா குணமடைய‌

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வரும் போது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க முடியும்.

கொலஸ்ட்ரால் குறைவடைய‌

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் நீங்கும்.

சிறுநீரகம் சுத்தமாவதற்கு

இப்பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பேணுகின்றது.

புற்றுநோய் பாதுகாப்பு

இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்து வரும் போது அவற்றில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மூலம் தற்போது பலரைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

மலச்சிக்கல் குணமடைய‌

அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள்;, இந்த பானத்தைப் பருகும் போது குடலியக்கம் மேம்பட்டு அப்பிரச்சனை உடனடியாக நீங்கும்;.

அசிடிட்டி குறைவதற்கு

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரம் குறைக்கப்பட்டு அசிடிட்டி பிரச்சனை குணமடையும்.

சமிபாட்டுத் தன்மை அதிகரிக்க‌

மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வநவரும் போது சமிபாட்டுப் பிரச்சனைகள் எழாது.

அல்சர் குணமாக‌

இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து முழுமையான விடுதலையளிக்கும்.

By: Tamilpiththan

Previous articleதூங்கும்முன் வெங்காயச் சாற்றை பாதங்களில் 2 நிமிடம் தேயுங்கள்!
Next articleஆகா! நான் இல்லைங்க சிவகார்த்திகேயன் தான்! நீ எல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா?