ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்தார்.
இவ்வாறு சிசிச்சை பெற்றுவந்த அருண்பிரசாந் மறுநாளே(ஏப்ரல் மாதம் 22திகதி)மேலதிக சிசிச்சைக்காக உலங்கு விமானத்தின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு 47 நாட்களாக தொடர்ச்சியாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தார்.
எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை 6.30 அளவில் அவர் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த 30 வயது இளைஞரான செ.அருண்பிரசாத் எனும் வெல்டிங் கடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 29 ஆக காணப்பட்ட போதிலும், தற்போது உயிரிழந்துள்ளவரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.