சிறுமியை கொடூரமாக கொன்று தலையை வீதிக்கு எடுத்து வந்த வாலிபர்!

0

தன் ஆசைக்கு இணங்க மறுத்ததால் 13 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் தலைவாய்ப்பட்டி அருகேயுள்ள சுந்தரபுரத்தைச் சேர்ந்த தம்பதியினர் சாமிமுத்து, சின்னப்பொன்னு. இவர்களுக்கு ஒரு மகனும் ராஜலட்சுமி என்ற 13 வயது மகளும் உள்ளனர்.

ராஜலட்சுமி தலைவாய்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடைய வீட்டுக்கு அருகில் தினேஷ்குமார் என்கிற கார்த்திக் (27). இவரின் மனைவி சாரதா இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில், பள்ளியை முடித்து வந்ததும், ராஜலட்சுமி தினேஷ் என்பவரின் 4 வயது மகனுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். தன் குழந்தையோடு விளையாடும் சிறுமி ராஜலட்சுமி மீது தினேஷ்குமார் வக்கிர எண்ணத்தோடு தொட்டுப் பேசி சில்மிஷமும் செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு ராஜலட்சுமி தினேஷ் மகனுடன் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தினேஷ் ராஜலட்சுமியை பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்.

இந்நிலையில், தினேஷின் ஆசைக்கு இனங்காமல் ராஜலட்சுமி கதறி அழுதுள்ளார், இதனால் ஆத்திரப்பட்ட தினேஷ் அரிவாளால் ராஜலட்சுமி கழுத்தை தனியாக வெட்டி வீதிக்கு எடுத்து வந்துள்ளார்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமாரின் மனைவி சாரதாவும், அவரின் தம்பியும், தினேஷ்குமாரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகீழாநெல்லி இலைகளை அரைத்து மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.
Next articleமறுபிறவியின் இரகசியம்! கருட புராணம் கூறும் உண்மைகள்!