பலாத்காரம் செய்த சாமியார் கல்லூரி மாணவி
பலாத்காரம் செய்த சாமியார் ஆணுறுப்பை வெட்டிய கல்லூரி மாணவி.. முதல்வர் பாராட்டால் வெடித்த சர்ச்சை
திருவனந்தபுரம்: தொடர்ந்து 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த செயல் சரியா, தவறா என்ற வாத, விவாதம் தொடங்கியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா (54). இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். கணேஷனந்தாவுக்கும் ஒரு பெண்மணிக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே கள்ள உறவு இருந்துள்ளது.
இந்த நிலையில், அவ்வப்போது பெண்மணியின் வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் மகளான சட்டக் கல்லூரி மாணவியையும் பாலியல் உறவில் ஈடுபடுத்தியுள்ளார்.