கோவிட் – 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த வைத்தியர் க. தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு ஜெய் நகரிலுள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் சித்த வைத்தியர் தணிகாசலம். இவர் கொரோனா நோய்க்குரிய மருந்து
தன்னிடம் இருப்பதாகவும் கொரோனா நோயாளிகளைக் கொடுத்தால் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் கூறிவந்தார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறையின் இயக்குனர் காவல்துறையில் புகார் அளித்தையிட்டு மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு நோய்தொற்று தடுப்பு சட்டத்தின் படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: